தளபதி 67வது படத்தில் நடிக்கிறீர்களா? அதைப் பற்றி கேக்காதீங்க..த்ரிஷா மழுப்பல் பதில்!

சென்னை : பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் நடிகை திரிஷாவிடம் தளபதி 67 படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்துள்ளார்.

இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் , பார்த்திபன், சரத்குமார், ஜெயராம் ரமேஷ், விக்ரம் பிரபு என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். டிரைலர் கமலின் கர்ஜனைக் குரலுடன் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.

வீணை, உடுக்கை

வீணை, உடுக்கை

இப்படத்திற்கு இசையமைத்துள்ள ஏஆர்.ரஹ்மான், அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளான எக்காளம், நாயனதாளம், பம்பை, தப்பு, பஞ்சமுக வாத்தியம், நாதஸ்வரம், வீணை, உடுக்கை, உருமி, கொம்பு ஆகிய வாத்தியங்களை பயன்படுத்தி உள்ளார். அனைத்து பாடல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், சோழா சோழா, பொன்னி நதி பாடல் ரசிகர்களின் விருப்ப பாடலாகவே மாறியுள்ளது.

5 மொழிகளில்

5 மொழிகளில்

லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்த படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

வசனம் வாயில் நுழையவில்லை

வசனம் வாயில் நுழையவில்லை

இதில் கலந்துகொண்டு பேசிய த்ரிஷா, ஜெயமோகன் தமிழ் எளிமையாக இருக்கும். எழுத்தில் அனைத்தையும் சொல்ல முடியும். ஆனால் சினிமாவில் உடல் மொழி மற்றும் வசனங்களை வைத்து தான் ஒரு கதாபாத்திரத்தை கூற வேண்டும். அதை ஜெயமோகன் சிறப்பாக செய்தார். ஆனால், வசனங்களை படித்ததும் வாயில் நுழையவில்லை. நிறைய ஒத்திகை செய்தேன்.

தளபதி 67ல் நடிக்கிறீர்களா?

தளபதி 67ல் நடிக்கிறீர்களா?

இதையடுத்து, நடிகை திரிஷாவிடம், தளபதி 67 படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்வியை கேட்டு சிரித்த திரிஷா, இது பொன்னியின் செல்வன் புரமோஷன் நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சியில் இந்த படம் சம்பந்தமான கேள்விகளை மட்டுமே கேளுங்க என மழுப்பலாக பதிலளித்தார். தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்காததால், அவர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X