For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திரிஷாவுக்கு பிறந்தநாள்... ராம் தந்த ஸ்பெஷல் ‘டிரெய்லர்’ பரிசு!

|

சென்னை: திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த பரமபதம் விளையாட்டு பட டிரெய்லரை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி.

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேலாக நாயகியாகவே நடித்து வருபவர் என்ற பெருமைக்குரியவர் நடிகை திரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு என இன்றைய முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

தற்போது இளம் நாயகிகளுக்கு போட்டியாக ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்றுதான் ஆக்ஷன், த்ரில்லர் நிறைந்த 'பரமபத விளையாட்டு'. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷாவுடன், நந்தா துரைராஜ், ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி, சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சோனா உள்பட பலர் நடித்துள்ளனர்.

அம்ரிஷ் இசையமைத்துள்ள அப்படத்தை திருஞானம் இயக்கியுள்ளார். இந்த படத்தை 24ஹவர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஓவர் சீன் போட்டு, திமிராக பேசும் நடிகர்: தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்

திரிஷா பிறந்தநாள்

திரிஷா பிறந்தநாள்

இந்நிலையில், திரிஷாவின் பிறந்தநாளையொட்டி இன்று அப்படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கிறது. இதனை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட இருக்கிறார். திரிஷாவும், விஜய் சேதுபதியும் 96 படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஜானுவுக்கு, ராம் வரும் பரிசு இது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

திரிஷாவின் 60வது படம்

திரிஷாவின் 60வது படம்

திரிஷாவின் 60வது படமாக உருவாகி வரும் பரமபதம் விளையாட்டு ஒரு அரசியல் திகில் படம். ஒரு இரவில் காட்டுக்குள் நடக்கும் சம்பவங்களே கதை. இப்படம், நிச்சயம் எல்லா வயது ரசிகர்களுக்கும் பிடிக்கும் என படக்குழு நம்பிக்கையுடன் கூறுகிறது.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங், இசைக்கோர்ப்பு பணிகள் நடக்கின்றன. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து

இது ஒருபுறம் இருக்க, நடிகை திரிஷாவுக்கு சக நடிகர், நடிகையர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் திரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திரிஷா பிறந்தநாள்

திரிஷா பிறந்தநாள்

இந்நிலையில், திரிஷாவின் பிறந்தநாளையொட்டி இன்று அப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. இதனை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார். திரிஷாவும், விஜய் சேதுபதியும் 96 படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஜானுவுக்கு, ராம் தந்த பரிசு இது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

English summary
On the occasion of actress Trisha's 36th birthday, actor Vijay Sethupathy is releasing her Paramapatham movie trailer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more