90ஸ் குயின்.. திரிஷா பிறந்த நாள்.. விதவிதமான ஹேஷ்டேக்ஸால் தெறிக்கும் டிவிட்டர்! #HBDSouthQueenTrisha
சென்னை: நடிகை திரிஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு டிவிட்டரில் விதவிதமான ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன.
Recommended Video
நடிகை திரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஜோடி படத்தில் சிறு வேடத்தில் நடித்த திரிஷா முதல் முறையாக லீடிங் ரோலில் சூர்யாவுடன் மவுனம் பேசியதே படத்தில் நடித்தார்.
தொடர்ந்து அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிம்பு, விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டுள்ளார் திரிஷா. ஏராளமான விருதுகளையும் குவித்திருக்கிறார் திரிஷா.

ஹேஷ்டேக்குகள்
இந்நிலையில் இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விதவிதமான ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து தங்கள் தலைவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

டாப் ட்ரென்டிங்
அந்த வகையில் #HBDSouthQueenTrisha, #HappyBirthdayTrisha, #HBDTrisha உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் ட்ரென்டிங்கில் உள்ளன. இந்த ஹேஷ்டேக்குகள் சென்னை ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளன.

90களின் குயின்
அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்களும் அவர்கள் சார்பாக திரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர். பிறந்தநாள் வாழ்த்துக்கள் 90 களின் ராணி ஆசிர்வாதங்களும் மகிழ்ச்சியும் நிரம்பிய உங்கள் முகத்தில் ஒரு புன்னகையை போல ஒரு சிறந்த ஆண்டாக இருக்கட்டும் செல்லக்குட்டி என வாழ்த்து கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

நீடுழி வாழ வேண்டும்
சூர்யா ரசிகரான இவர், ஒரே ஒரு திரிஷா தான்.. உங்களின் இடத்தை யாராலும் ரீபிளேஸ் செய்ய முடியாது.. நீடுழி வாழ வேண்டும்.. பிறந்த நாள் வாழ்த்துகள் என கூறியுள்ளார். மற்றொரு ரசிகரான இவர், உங்கள் முழு கேரியரிலும் ஜானு தான் ஐகானிக் பாத்திரம். உங்களின் பர்ஃபாமர்ன்ஸ்க்காக 96 படத்தை பலமுறை பார்த்தேன், கீப் ராக்கிங் என கூறியுள்ளார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











