தனித்தீவில் நண்பர்களுடன் சுற்றுலா கொண்டாட்டம்.. வேற லெவலில் என்ஜாய் செய்யும் திரிஷா!
சென்னை: நடிகை திரிஷா கிருஷ்ணன் பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ள திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டில் விஜய்யின் லியோ படம் வெளியானது.
இந்நிலையில் தற்போது விஜய்யுடன் கோட் படத்திலும் கேமியோ கேரக்டரில் திரிஷா நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார் திரிஷா.

நடிகை திரிஷா: நடிகை திரிஷா கிருஷ்ணன் 20 ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களிலும் பாலிவுட்டிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டவர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ள திரிஷா கடந்த ஆண்டில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தார். முன்னதாக பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 என அடுத்தடுத்த படங்களில் குந்தவையாக நடித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறியிருந்தார்.
விஜய்யுடன் ஆட்டம்: இந்நிலையில் கடந்த 5ம் தேதி ரிலீசான விஜய்யின் கோட் படத்திலும் பாடல் ஒன்றுக்கு விஜய்யுடன் இணைந்து சூப்பரான குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடல் படத்தில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. சில நிமிடங்களே வரும் இந்தப் பாடலுக்காக 50 முதல் 80 லட்சம் வரை திரிஷா சம்பளமாக பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கமல்ஹாசனுடன் தக் லைஃப் அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் திரிஷா சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.
சுற்றுலா கொண்டாட்டங்கள்: இது மட்டுமில்லாமல் அவ்வப்போது தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா கொண்டாட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்.திரிஷாவிற்கு நண்பர்கள் பட்டாளம் அதிகம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஷூட்டிங் இடையில் கிடைத்த இடைவெளியை தனி தீவில் தன்னுடைய நண்பர்களுடன் கொண்டாடி வருகிறார் திரிஷா. அவர் தன்னுடைய நண்பர்களுடன் சுடன் தீவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் அவர் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார்.

அடுத்தடுத்த படங்கள்: திரிஷாவிற்கு மட்டும் வயதே ஆகாதா என்று கூறுமளவிற்கு 40 வயதான நிலையிலும் தொடர்ந்து இளமையான லுக்குடன் காணப்படுகிறார். இந்நிலையில் அவ்வப்போது தன்னுடைய மனநிலையை உற்சாகப்படுத்தும் சுற்றுலா கொண்டாட்டங்களில் அவர் ஈடுபடுவதுதான் அவரது இளமையின் ரகசியமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியிலும் அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி வருகிறார் திரிஷா.


Click it and Unblock the Notifications











