Trisha: 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட திரிஷா!
சென்னை: விஜய் -திரிஷா நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி வெளியானது கில்லி படம். விஜய் சினிமா கேரியரில் மட்டுமில்லாமல் திரிஷா கேரியரிலும் மிகப்பெரிய ஹிட்டாக இந்தப் படம் அமைந்தது. தமிழ் சினிமாவில் 50 கோடி ரூபாய் வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் இந்தப் படம் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக தன்னை வெளிப்படுத்தினார் விஜய். வித்யாசாகர் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்.
தரணி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ஒவ்வொரு பிரேமிலும் ரசிகர்களை கவர்ந்தது. தில் ராஜு சொன்னது போல, பாட்டு வேணுமா பாட்டு இருக்கு, ஆக்ஷன் வேணுமா ஆக்ஷன் இருக்கு என்பது போல இந்தப் படத்தில் அனைத்து அம்சங்களையும் இழைத்திருந்தார் இயக்குநர். கபடி வீரராக விஜய் படத்தில் மாஸ் காட்டியிருந்தார். இடையில் திரிஷாவை வில்லன் பிரகாஷ் ராஜிடமிருந்து காப்பாற்றும் அவரது நடவடிக்கைகளும் ரசிகர்களை அப்படி கட்டிப் போட்டது.

கில்லி படம்: விஜய் -திரிஷா காம்பினேஷனில் 7 படங்கள் வெளியான சூழலிலும் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரிட் படம் என்றால் அது கில்லிதான். இந்தப் படம் கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி தமிழகத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர்ஹிட் வசூலை பெற்றது. தமிழில் வெளியாகி 50 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்தே தன்னை மாஸ் ஹீரோவாக சிறப்பாக வெளிப்படுத்தினார் விஜய். தரணி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் படம் வேறு லெவலில் ரசிகர்களை கவர்ந்தது. படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட். தற்போதும் ரசிகர்களின் பேவரிட் விஜய் பாடல்களில் இந்தப் படத்தின் பாடல்களும் இடம்பெற்றுவிடும்.
கில்லி ரீ -ரிலீஸ்: இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்றைய தினம் படம் மறு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கில்லி படம் இன்று ரிலீசாகியுள்ளது. சக்தி பிலிம் பேக்டரி படத்தை ரிலீஸ் செய்துள்ளது. மறுவெளியீடு என்பதை மறந்துவிட்டு ரசிகர்கள் படத்தை திரையரங்குகளுக்கு சென்று கொண்டாடி வருகின்றனர். அப்படி போடு, அர்ஜுனரு வில்லு பாடல்களுக்கு அரங்கமே அதிர்ந்து வருகிறது. இந்தப் படம் மறு ரிலீசில் அதிகமான கோடிகளை அள்ள வாய்ப்புள்ளதாக சக்தி பிலிம் பேக்டரி தெரிவித்துள்ளது. மறுவெளியீட்டில் வெளியாகிவரும் படங்களில் விஜய்யின் கில்லி படம் வசூல் சாதனை படைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
திரிஷா நெகிழ்ச்சி: இந்நிலையில் வாழ்க்கை மீண்டும் துவங்கிய இடத்திலேயே வந்து நிற்பதாக கில்லி படத்தின் நாயகி திரிஷா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கில்லி முதல்நாள் முதல் ஷோ ப்ளாக் பஸ்டர் வைப்சுடன் இன்றைய பொழுது விடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் தனலட்சுமி என்ற கேரக்டரில் வில்லன் பிரகாஷ்ராஜின் மாமன் மகளாக வந்து தன்னுடைய அண்ணன்களை அடுத்தடுத்து இழக்கும் கேரக்டரில் நடித்திருப்பார் திரிஷா. கபடிக்காக அங்குவரும் விஜய் அவரை காப்பாற்றும் நிலையில், இருவருக்கும் காதல் பற்றிக் கொள்வதாக படம் நகரும்.

விஜய் -திரிஷா ஜோடி: இந்தப் படத்தை 20 ஆண்டுகள் கடந்து தற்போதைய ரசிகர்களும் கொண்டாடி வருவது மிகச்சிறப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் விஜய் -திரிஷா இருவரும் இணைந்து லியோ படத்தில் நடித்து சிறப்பான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திலும் விஜய் -திரிஷா காம்பினேஷனில் ஒரு பாடல் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இவற்றிற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது கில்லி படம்தான். இந்தப் படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. அதைத்தான் தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











