Trisha: விடாமுயற்சி சூட்டிங்கை முடிச்சாச்சு.. அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் திரிஷா.. க்யூட் கிளிக்ஸ்!
சென்னை: நடிகை திரிஷா அடுத்தடுத்து விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். சில காலங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் திரிஷாவின் ஆதிக்கம், தென்னிந்திய அளவில் அதிகரித்து காணப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் அடுத்தடுத்து அவர் ஆறு படங்களில் நடித்துள்ளார்.
இந்த படங்கள் அடுத்த ஆண்டு ஒவ்வொரு படமாக ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் அஜித்துடன் திரிஷா நடித்துள்ள விடாமுயற்சி படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை திரிஷா: நடிகை திரிஷாவின் காட்டில் மழை என்றுதான் கூற வேண்டும். அதிலும் படமழையாக உள்ளது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார் திரிஷா. பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த திரிஷாவிற்கு கடந்த 2022ம் ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் படம்தான் மிகப்பெரிய ஓபனிங்கை மீண்டும் கொடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டில் விஜய்யுடன் திரிஷா நடிப்பில் வெளியான லியோ படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரியும் லிப்லாக்கும் அதிக கவனத்தை பெற்றது.
விடாமுயற்சி படம்: இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான விஜய்யின் கோட் படத்திலும் மட்ட பாடலில் அவருடன் இணைந்து கெட்ட ஆட்டம் போட்டிருந்தார் திரிஷா. அடுத்தடுத்து விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரிஷா, அடுத்ததாக அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் இணைந்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் இறுதி கட்ட சூட்டிங் தாய்லாந்தில் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
திரிஷா நடிப்பில் 6 படங்கள்: விடாமுயற்சி படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. காரணம் கடந்த ஆண்டு பொங்கலையொட்டி அஜித்தின் துணிவு படம் வெளியான நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து அவரது அடுத்த படம் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் நீண்ட காலங்களுக்குப் பிறகு திரிஷா அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். அஜித்துடன் தான் இருக்கும் புகைப்படங்களை சில தினங்களுக்கு முன்பு திரிஷா பகிர்ந்த நிலையில் இந்த படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதனிடையே, அடுத்த ஆண்டிலேயே திரிஷா நடிப்பில் அடுத்தடுத்து ஆறு படங்கள் ரிலீசாக உள்ளன.
சினிமாவில் 22 ஆண்டுகள்: கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்திலும் திரிஷா நடித்த முடித்துள்ள நிலையில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, ஐடென்டிடி, விஷ்வம்பரா என அடுத்தடுத்த படங்கள் திரிஷா நடிப்பில் அடுத்த ஆண்டில் ரிலீசாகவுள்ளன.இந்நிலையில் அடுத்ததாக சூர்யாவின் சூர்யா 45 படத்திலும் இணைந்துள்ளார் திரிஷா. இந்த படமும் அடுத்த ஆண்டிலேயே ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது. சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் திரிஷா. இதன் கொண்டாட்டத்தை சமீபத்தில் சூர்யா 45 படக்குழுவினருடன் இணைந்து அவர் கேக் வெட்டி கொண்டாடியதை பார்க்க முடிந்தது.
பட்டாயா கடற்கரையில் கொண்டாட்டம்: இந்நிலையில் தற்போது தாய்லாந்தில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ள திரிஷா, அங்குள்ள பட்டாயா கடற்கரையில் கொண்டாட்டத்துடன் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் வெளியிட்டுள்ளார். தன்னுடைய மனம் எப்போதும் அடுத்தடுத்த இடங்களை பார்க்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு திரிஷா ஆண்டாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications











