Trisha: நடக்காதுனு தெரியும்.. ஆனாலும் கேட்கிறேன்.. "Get Ready With Me" த்ரிஷாவின் நக்கலான போஸ்ட் பாருங்க

சென்னை: நடிகை த்ரிஷா தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் முன்னணி நடிகையும் கூட. கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார் த்ரிஷா. இவருக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரது இன்ஸ்டாராம் போஸ்ட்டுகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கவனமும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது பகிர்ந்துள்ள அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

தமிழ் சினிமாவில் சம காலத்தில் உள்ள நடிகைகளில் அதிகப்படியான விமர்சனங்களை எதிர் கொண்டவர் நடிகை த்ரிஷா. சில அரசியல்வாதிகள் தொடங்கி, சில சினிமா நட்சத்திரங்கள் வரை பலரும் இவரை கடுமையாகவும் மிகவும் மோசமாகவும் விமர்சித்துள்ளனர். இது தொடர்பாக நடிகை த்ரிஷா புகார் எல்லாம் கொடுத்துள்ளார். அதேபோல் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு சென்று வந்ததையும் அரசியல் மேடையில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

Actress Trisha Fun Post On Instagram Which Attracts Fans Goes Trending
Photo Credit:

விமர்சனங்களைக் கடந்து முன்னிலை: நடிகை த்ரிஷாவும் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் பிறந்த நாள் வரும்போது எக்ஸ்குளுசிவான புகைப்படங்களை பகிர்ந்து, ஸ்பெஷலான வாழ்த்துகளை சொல்லி கவனம் ஈர்த்து வருகிறார். இதை பலரும் அவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் சிலர் அதை மிகவும் மோசமாக விமர்சித்தனர். சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை த்ரிஷாவை மோசமாக விமர்சித்தார். அதற்கு த்ரிஷா தரப்பில் இருந்து கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டது. இப்படி தொடர்ந்து பல விமர்சனங்களை எதிர் கொண்டாலும், திரைத்துறையில் முதன்மையான இடத்தில் இருக்கிறார் நடிகை த்ரிஷா.

நக்கல் போஸ்ட்: நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடிய நபர். தனது ரசிகர்களுக்கு எப்போதும் தனது அப்டேட்களை சொல்லிக் கொண்டே இருப்பார். அதேபோல் சமூகத்தில் நடைபெறும் சில அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார். இப்படி இருக்கையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் விளையாட்டாகவும் நக்கலாகவும் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அதில், " நடக்காதுனு தெரியும் ஆனாலும் கேட்கிறேன்.. Get Ready With Me? Q&A? " என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவைப் பார்த்தால் நடிகை த்ரிஷா அவரது சமூக வலைதளத்தில் லைவ் வரப்போகிறார் என்பது போலத் தெரிகிறதே என்று சிலரும், த்ரிஷா விளையாட்டுக்காக இப்படி போட்டுள்ளார் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X