அஜித், விஜய்யை தொடர்ந்து அந்த ஹீரோவுக்கும் ஜோடியாகும் திரிஷா.. 19 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஜோடி?
சென்னை: நடிகை திரிஷா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் அவருக்கு ஜோடியாக, அவரது மனைவியாக நடித்திருந்தார் திரிஷா. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விஜய்யின் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து ஆட்டம் போட்டிருந்தார்.
விஜய் -திரிஷா காம்பினேஷனில் வெளியான இந்தப்பாடல் ரசிகர்களை மிகச் சிறப்பாக கவர்ந்திருந்தது. இந்நிலையில் அடுத்ததாக அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா. இதையடுத்து குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா முன்னணி கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை திரிஷா: நடிகை திரிஷா 20 ஆண்டுகளை கடந்து தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக தொடர்ந்து வருகிறார். இவரது நடிப்பில் பல வெற்றி படங்களை ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்துள்ளனர். விஜய், அஜித், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம் என இவர் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன்இணைந்து நடித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிப் படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் திரிஷா லீட் கேரக்டரில் நடித்திருந்த பொன்னியின் செல்வன் 2 மற்றும் அதற்கு முன்னதாக வெளியான பொன்னியின் செல்வன் படங்கள் மிக சிறப்பான விமர்சனங்களை திரிஷாவிற்கு பெற்றுத் தந்தன.

அடுத்தடுத்த படங்கள்: இநதப் படங்களில் குந்தவை கேரக்டரில் ஆழமான மற்றும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் திரிஷா. இந்நிலையில் கடந்த ஆண்டில் விஜய்யுடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடித்த லியோ படமும் வெளியாகி ரசிகர்களை சிறப்பாக கவர்ந்தது. இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார் திரிஷா. தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கோட் படத்திலும் விஜய்யுடன் இணைந்து அதிரடி ஆட்டம் போட்டிருந்தார். இந்தப் பாடல் ரசிகர்களை சிறப்பாக கொண்டாட செய்தது. இந்நிலையில் தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளார்.
சூர்யாவுடன் இணையும் திரிஷா?: ரோட் திரில்லராக உருவாகியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலையோ ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் திரிஷா இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூர்யாவின் கங்குவா படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றநிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்க சூர்யா கமிட்டாகியுள்ளார். இந்த படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் விரைவில் சூட்டிங் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
19 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி: இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆறு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது 19 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவுடன் திரிஷா சூர்யா 45 படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் சூட்டிங்குடன் ஹீரோயின் குறித்த தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











