சிவகார்த்திகேயனோட வளர்ச்சியை பார்த்து பிரமித்துப் போன திரிஷா.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: நடிகை திரிஷா கமல், ரஜினி, விஜய், அஜித், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டில் விஜய்யுடன் திரிஷா நீண்ட காலங்களுக்கு பிறகு நடித்திருந்த லியோ படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.

லியோ படத்தை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்திலும் அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் இணைந்து நடித்து வருகிறார் திரிஷா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வரும் திரிஷா விரைவில் சல்மான் கானுடன் பாலிவுட்டில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Sivakarthikeyan Trisha tamil cinema

நடிகை திரிஷா: நடிகை திரிஷா தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழ். தெலுங்கு மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இடையில் சில காலங்கள் இவரது மார்க்கெட் ஆட்டம் கண்ட நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய ரீ-என்ட்ரியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார் திரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 என அடுத்தடுத்த படங்கள் திரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இந்த படத்தில் குந்தவை என்ற வரலாற்று சிறப்புமிக்க கேரக்டரில் நடித்து அனைவரது மனதையும் கொள்ளையடித்திருந்தார் திரிஷா.

விஜய்யுடன் ஜோடி: தொடர்ந்து விஜய்யுடன் திரிஷா இணைந்து நடித்திருந்த லியோ படம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகச் சிறப்பான விமர்சனங்களை அவருக்கு பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் திரிஷா மற்றும் விஜய்யின் கெமிஸ்ட்ரி நீண்ட காலங்களுக்கு பிறகு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. தொடர்ந்து தற்போது கமலுடன் தக் லைஃப் படத்திலும் அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார் திரிஷா. மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களிலும் அடுத்தடுத்து நடித்து வரும் திரிஷா, பாலிவுட்டிலும் சல்மான் கானுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வளர்ச்சிக்கு பெஸ்ட் உதாரணம்: இந்நிலையில் திரிஷா தன்னுடைய சமீபத்திய பேட்டியில் வளர்ச்சி என்பதன் மிகச்சரியான எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயன் மாறி உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். விஜய் டிவி ஷோ ஒன்றில் திரிஷா முன்னிலையில் முன்னதாக சிவகார்த்திகேயன் சிறப்பான மிமிக்ரி பெர்ஃபார்மென்சை கொடுத்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக மாறி உள்ள நிலையில் அவரது வளர்ச்சி மிகப் பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாக திரிஷா கூறியுள்ளார். இதுவரை சிவகார்த்திகேயனுடன் இணைந்து திரிஷா நடிக்காத நிலையில் விரைவில் இவர்கள் கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்தடுத்த படங்கள்: முன்னணி நடிகையாக இருந்தபோதிலும் படத்தின் பிரமோஷன்களுக்கு வரமாட்டேன் என்பது போல எந்த கண்டிஷனையும் போடாமல் தன்னுடைய படங்களின் பிரமோஷன்களில் முதல் ஆளாக வந்து பங்கேற்கிறார் திரிஷா. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக அடுத்தடுத்த போஸ்ட்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். லியோ படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பாடல் ஒன்றில் விஜய்யுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார். இந்தப் படத்தின் ரிலீசுக்காக தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X