எனக்கு 'அந்த' பயம் அதிகம்... சீக்ரெட்டை உடைத்த திரிஷா!

தனக்கு பேய் பயம் அதிகம் என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

Recommended Video

எனக்கு அந்த பயம் இருக்கு என்று போட்டுடைத்த திரிஷா- வீடியோ

சென்னை: மோகினி படத்தில் பேயாக நடித்துள்ள நடிகை திரிஷா, தனக்கு பேய் பயம் அதிகம் என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 16 வருடங்களாக முன்னணி நடிகையாக கோலோச்சி வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள மோகினி திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை, ஜூலை 27ம் தேதி ரிலீசாகிறது.

இதையொட்டி, நடிகை திரிஷா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், தனக்கு பேய் நம்பிக்கை இருப்பதால், அதைக்கண்டு பயப்படுவேன் எனக் கூறினார்.

மோகினி பேய்

மோகினி பேய்

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, " மோகினி படம் உண்மையிலேயே மிகவும் கஷ்டப்பட்டு நடித்தப்படம். பல்வேறு போராட்டங்கள், தடைகளுக்கு பிறகு இப்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

விருந்து

விருந்து

இந்த படம் பார்வையாளர்களுக்கு விருந்தாக இருக்கும். இயக்குனர் மாதேஷ் அந்த அளவுக்கு கடின உழைப்பைக் கொட்டி, லண்டனில் விஎப்எக்ஸ் வேலைகளை செய்து, எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

மோகினி பிடிக்கும்

மோகினி பிடிக்கும்

இதில் நான் வைஷ்ணவி, மோகினி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். எனக்கு அதில் மோகினி கதாபாத்திரம் தான் மிகவும் பிடிக்கும்.

பேய் என்றாலே பயம்

பேய் என்றாலே பயம்

பொதுவாக பேய் படங்கள் என்றால் எனக்கு அதிக விருப்பம். எனக்கு பேய் நம்பிக்கை உண்டு. அதேபோல் பேய் பயமும் அதிகம்.

அப்படி எல்லாம் இல்லை

அப்படி எல்லாம் இல்லை

இனி நான் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் தான் நடிப்பேனா என கேட்கிறார்கள். அப்படி இல்லை. விஜய் சேதுபதியுடன் '96', சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்களிலும் நடிக்கிறேன். கதை நன்றாக இருந்தால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மீண்டும் நடிப்பேன்", என நடிகை திரிஷா தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X