திரிஷா இந்தி படத்தில் நடிக்காததற்கு இதுதான் காரணமா? அவரே சொன்ன பதிலை கேளுங்க!
சென்னை: தமிழ் சினிமாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை திரிஷா. சிலருக்கு வயது ஏற ஏற வாய்ப்பு குறையும். ஆனால், திரிஷாவிற்கு மட்டும்,வயசு ஏறவே ஏறாதா என்று அனைவரும் பார்த்து பொறமை கொள்ளும் அளவிற்கு அதே அழகுடன் இருக்கிறார். அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர், இந்தி படத்தில் நடிக்காததற்கான காரணத்தை சொல்லி உள்ளார்.
நடிகை திரிஷா, 1999 ஆம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வந்து போனார். இதைத் தொடர்ந்து அமீர் கண்ணில் பட்ட இவர், சூர்யாவுடன் மௌனம் பேசியதே படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். பின் அதே ஆண்டில் பலத் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவரைத் தேடி வர, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகை என பெயர் எடுத்தார்.

நடிகை திரிஷா: விஜய்யுடன் இவர் நடித்த கில்லி படத்தையும், சிம்புவுடன் இவர் ஜோடி போட்டு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தையும் அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. இந்த இரண்டு படங்களும் அண்மையில் ரீ ரிலீஸ் ஆன போதும் தியேட்டரில் இந்த படத்தை பார்க்க ஒரு கூட்டம் கூடியது தான் இதற்கு சாட்சி.
15 ஆண்டுகளுக்கு பின்: கில்லி படத்திற்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் திரிஷா, லியோ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இவர்களின் கெமிஸ்ட்ரி பட்டையை கிளப்பியது, அதுவும் குறிப்பாக அந்த முத்தக்காட்சிக்கு தியேட்டரில் கைத்தட்டல் பறந்தது. லியோ படத்தை தொடர்ந்து,அஜித்துடன் 12 ஆண்டுக்கு பிறகு விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வர இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீழ்ச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இரட்டை வேடத்தில்: கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடிக்கிறார். இதற்கு அடுத்தபடியாக தெலுங்கு இயக்குநர் வசிஷ்ட மல்லிடி இயக்கத்தில் உருவாக உள்ள விஸ்வம்பரா படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவி, த்ரிஷாவுடன் சுரபி, இஷா சாவ்லா உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் த்ரிஷா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதான் காரணம்: 40 வயது கடந்த போதும், டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் திரிஷா, இந்தி படத்தில் நடிக்காது குறித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், 2010ம்ஆண்டு அக்சய் குமாருடன் இணைந்து, கட்டா மீட்டா படத்தில் நடித்தேன். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், இந்தி ரசிகர்கள் மனதில் என்னால் இடம் பிடிக்க முடியாமல் போனதால், அதுவே என் முதலும் கடைசி படமாக அமைந்துவிட்டது.
இதனால், நான் பாலிவுட்டிலிருந்துவிலகி விட்டேன். மேலும், இதற்காக என்னால், மும்பையில் செட்டிலாக நான் தயாராக இல்லை . அங்கே செல்ல வேண்டும் என்றால் சவுத்தில் நிறையவற்றை விட்டு விடவேண்டும். பாலிவுட்டுக்கு சென்று எனது கெரியரை புதிதாக மீண்டும் ஆரம்பிக்கும் அளவிற்கு ஆர்வம் அப்போது எனக்கு இல்லை . இதனால்தான் இந்திப் படங்களில் நடிக்கவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











