Trisha : எனது தனிப்பட்ட வாழ்க்கையை நீங்க விவாதிக்க வேண்டாம்.. நயினாருக்கு த்ரிஷா வக்கீல் நோட்டீஸ்

சென்னை: கடந்த வாரத்தில் இருந்தே தமிழ் சினிமா உலகில் மட்டும் இல்லாமல், அரசியல் தளத்திலும் அடிப்பட்ட பெயர் த்ரிஷா. தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அரசியல் கட்சி நடத்திவரும் நடிகரை விமர்சிக்கும்போது, நடிகை த்ரிஷாவின் பெயரை குறிப்பிட்டு விமர்சித்தார். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது வக்கீல் மூலம் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதாவது, எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொது வெளியில் விவாதிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும், அப்படி விவாதித்தால் அவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Actress Trisha has sent a legal notice against those who criticized her for being obscene with a famous actor

இந்த விவகாரம் தொடர்பாக த்ரிஷாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் நித்தியேஷ் நடராஜ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்” கண்ணியமற்ற விமர்சனம்: ஊடகங்களில் த்ரிஷா குறித்துப் பரவி வரும் தரம் குறைந்த மற்றும் அருவருப்பான விமர்சனங்கள் தொடர்பாக இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

அதிர்ச்சியும் வருத்தமும்: மாநிலத்தின் மிக உயரிய அரசியல் பொறுப்பில் உள்ள ஒருவர், இவ்வளவு தரம் தாழ்ந்த மற்றும் பொருத்தமற்ற கருத்தைத் தெரிவிப்பார் என்று த்ரிஷா ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இது மிகுந்த வருத்தத்திற்குரியது.

அரசியல் நிலைப்பாடு: த்ரிஷா எப்போதும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொண்டவர் அல்ல; எதிர்காலத்தில் அத்தகைய எண்ணமும் அவருக்கு இல்லை என்பதைத் திட்டவட்டமாக இந்த அறிக்கை மூலம் தெரிவிக்கிறார். கடந்த காலங்களில் அவர் கடைபிடித்ததைப் போலவே, எதிர்காலத்திலும் அரசியலில் எப்போதும் ஒரு நடுநிலையான போக்கையே அவர் பின்பற்றுவார்.

கலைஞராக அங்கீகாரம்: நடிகை த்ரிஷா எப்போதும் தனது கலைப்பணியால் மட்டுமே அடையாளப்பட விரும்புகிறார்; எந்தவிதமான அரசியல் சாயமும் பூசப்படுவதை அவர் விரும்பவில்லை. ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பொது விவாதத்திற்குரியப் பொருளாகக் கூடாது என்பது பொதுவான பண்பு. பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது நிதானத்தையும், கண்ணியத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். த்ரிஷாவுக்கும் அவருக்கும் சற்றும் தொடர்பில்லாத விவகாரங்களுக்கும் இடையே அவரது பெயரை இழுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X