Actress Trisha: ராம்சரண் வீட்டு நாய்க்குட்டியுடன் கொஞ்சல்ஸ்.. ட்ரெண்டாகும் திரிஷா வீடியோ!

சென்னை: நடிகை திரிஷா 20 ஆண்டுகளை கடந்து தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. தற்போது தமிழில் அஜித், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து விடாமுயற்சி, தக் லைஃப், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் இணைந்து விஸ்வம்பரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலிவுட்டிலும் சல்மான் மற்றும் விஷ்ணுவர்தான் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தில் திரிஷா இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படுகிறார் திரிஷா. அவரது instagram பக்கத்திலும் ஏராளமான பாலோயர்கள் காணப்படுகின்றனர். அவரது அடுத்தடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. ரசிகர்களும் திரிஷாவின் அடுத்தடுத்த புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவ்வாறு தற்போது திரிஷா, ராம்சரண் வீட்டு நாய்க்குட்டியுடன் காணப்படும் வீடியோ வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Actress Trisha have some fun moment with Ramcharan s pet dog

நடிகை திரிஷா: நடிகை திரிஷா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். 20 ஆண்டுகளை கடந்த போதிலும் இன்னும் இளமை மாறாத அழகுடன் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார் திரிஷா. தற்போது விஜய்யுடன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் கமல்ஹாசனுடன் தக் லைஃப் அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா பாலிவுட்டில் சல்மான் கானுடன் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளார் திரிஷா. நிற்கக்கூட நேரமில்லாமல் இந்த படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் திரிஷா.

அடுத்தடுத்த மொழிப்படங்கள்: மலையாளத்திலும் டொமினோ தாமஸ் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். சமூகவலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் திரிஷா. இன்ஸ்டாகிராமில் இவரை ஏறக்குறைய 7 மில்லியன் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.அடுத்தடுத்த புகைப்படங்கள், சூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ் உள்ளிட்டவற்றை பகிர்ந்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்களை தொடர்ந்து திரிஷாவின் மார்க்கெட் வேல்யூ அதிகரித்துள்ளது. மேலும் அவரது சம்பளமும் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ராம்சரண் வீட்டு நாய்க்குட்டியுடன் திரிஷா: சில வீடியோக்களை ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர் இவை அனைத்தும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது ராம்சரண் வீட்டு நாய்க்குட்டியுடன் திரிஷா காணப்படும் வீடியோ ஒன்று அடுத்தடுத்து பகிரப்பட்டு வருகிறது, இந்த வீடியோவில் ரைம் என்ற அந்த நாய்குட்டிக்கு திரிஷா மசாஜ் செய்வதாக காணப்படுகிறது. அவர் அழகாக தடவி கொடுக்கும் நிலையில் நாய்க்குட்டியும் நின்ற இடத்திலேயே சிலையாக நிற்பதாக இந்த வீடியோவில் காணப்படுகிறது. அவரது அந்த மசாஜை அந்த நாய்க்குட்டி என்ஜாய் செய்வதாகவும் இந்த வீடியோவில் காணப்படுகிறது. இந்த வீடியோ ஏராளமான ஷேரிங்கை பெற்று வருகிறது. தற்போது ராம்சரணின் தந்தை சிரஞ்சீவியுடன் திரிஷா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விலங்கு நல ஆர்வலர்: திரிஷா எப்போதும் நாய் போன்ற செல்லப்பிராணிகளுடன் இருக்கும்படியான வீடியோக்கள், புகைப்படங்களை அதிகமாக வெளியிட்டு வருகிறார். அவருக்கு இவற்றின்மீது மிகப்பெரிய அளவில் பிரியம் காணப்படுகிறது. தெரு நாய்களை தத்தெடுக்க எப்போதும் தனது ரசிகர்களை அவர் ஊக்குவித்து வருகிறார். இதேபோல இவற்றிற்கான ஷெல்டர்களையும் அவர் அதிகளவில் திறந்து வருகிறார். விலங்கு நல ஆர்வலராக அவர் இத்தகைய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவது கறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X