செம பர்ஃபாமன்ஸ் என அப்ளாஸை அள்ளிய திரிஷாவின் டாப் 5 படங்கள்.. எவைன்னு தெரியுமா.. ஒரு ரவுண்ட்அப்!
சென்னை: நடிகை திரிஷாவின் பர்ஃபாமன்ஸால் அப்ளாஸை அள்ளிய ஐந்து படங்கள் எவை எவை என்பது குறித்து ஓர் பார்வை..
Recommended Video
நடிகை திரிஷா இன்று தனது 37 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 1999ஆம் ஆண்டு ஜோடி படத்தில் பெயர் குறிப்பிடப்படாத ஒரு கதாப்பாத்திரத்தில் வந்து சென்றார் திரிஷா.

டாப்பில் 96
ரொமான்ஸ், ஆக்ஷன், ஹாரர், சென்டிமென்ட் என கலக்கி வருகிறார் நடிகர் திரிஷா. இந்நிலையில் திரிஷாவின் சினிமா கேரியரில் அதிக பாராட்டுக்களை பெற்ற சிறந்த படங்கள் குறித்த தகவல்களை இங்கு காணலாம். அந்த வகையில் கேரியரில் டாப்பில் உள்ள படம் 96.

அழகான நடிப்பு
பிரேம் குமார் இயக்கத்தில் உருவான 96 படம் திரிஷாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு ஐகானிக் படம் என்றே சொல்லலாம். விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக இணைந்து நடித்திருப்பார். 22 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் பள்ளிப்பருவ நண்பர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட காதலை உணரும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது இப்படம். தனது உணர்வை கட்டுப்படுத்தி காதலுக்கும் அதனை விடுவதற்கும் இடையில் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் திரிஷா.

விண்ணைத்தாண்டி வருவாயா
அடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா.. கவுதம் மேனனின் இயக்கத்தில் வெளியான பெரும் வெற்றி பெற்ற படம். தன்னை விட இளவயது இளைஞரான சிம்புவுக்கும் அவருக்குமான காதலை பேசும் படமாக இருந்தது விண்ணைத்தாண்டி வருவாயா. ஜெஸியாக அந்த படத்தில் வாழ்ந்திருப்பார் திரிஷா. எத்தனை முறை பார்த்தாலும் திரிஷாவின் நடிப்பு படத்தில் ஃபிரஷாகவே இருக்கும்.

அபியும் நானும்
அடுத்து இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் வெளியான அபியும் நானூம் படம். த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக அப்பாக்களுக்கு பிடித்த படமாக இருந்தது இப்படம். திரிஷாவின் நடிப்புக்காக அதிக பாராட்டுக்களை பெற்றது.

நுவுவொஸ்தானன்டே நீனொத்தன்ட்டனா
நுவுவொஸ்தானன்டே நீனொத்தன்ட்டனா என்று தெலுங்கு படமும் பெரும் வரவேற்பை பெற்றது. பிரபு தேவா இயக்கத்தில் வெளியான படம் நுவ்வு வஸ்தனான்டே நெனு வத்தன்டனா படத்தில் த்ரிஷா கிராமப்புற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். விவசாயின் தங்கையாக எளிமையான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் சித்தார்த் ஜோடியாக திரிஷாவின் நடிப்பு இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது.

மவுனம் பேசியதே
அடுத்த மவுனம் பேசியதே.. இப்படம் திரிஷா லிடிங் ரோலில் நடித்த முதல் படமாகும். இப்படத்தில் அவரது நடிப்பு ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தோற்றம் மற்றும் திறமை இரண்டையும் கொண்டிருந்த ஒரு நடிகையின் வருகையை இப்படம் குறித்தது. சூரியாவுடன் நடித்த இந்த படம், த்ரிஷாவின் வாழ்க்கையில் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக உள்ளது.


Click it and Unblock the Notifications











