Trisha: த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் கெட்ட வார்த்தை.. அம்மனி கொஞ்சம் ரக்கட் ஆன ஆளுதான் போல!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு நடிகை ஐந்து ஆண்டு காலத்திற்கு நீடிப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். எப்பேர்பட்ட நடிகையாக இருந்தாலும், அந்த நடிகை தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தாலும் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் அல்லது அதிக பட்சம் ஐந்து ஆண்டுகள்தான். அந்த அளவுக்கு தமிழ் சினிமா உலகம் சவாலானது. இங்கு கதாநாயகனாக நீடிப்பதில் இருக்கும் சவாலை விட, கதாநாயகியாக நீடிப்பதில் இருக்கும் சவால் அதிகம். கதாநாயகனாக எப்போது வேண்டுமானாலும் கம்-பேக் கொடுத்து விடலாம்.
ஆனால் கதாநாயகியாக ஒருவர் மார்க்கெட்டை இழந்து விட்டால், அவர் வேறு சினிமா உலகத்தை தேடிப் போகவேண்டிதான் இருக்குமே தவிர, தமிழ் சினிமா உலகில் அந்த நடிகைக்கு வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது.

அப்படியான தமிழ் சினிமாவில், துணை நடிகையாக இருந்து, நடிகையாக மாறி, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்ததுடன் அந்த இடத்தில் தொடர்ந்து நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நடிக்கும் படங்கள் குறித்த போஸ்ட்கள், தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் குறித்த போஸ்ட்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கடைசியாக பதிவிட்ட பதிவில் கெட்டவார்த்தை இடம் பெற்றிருப்பது பலரும் ஷாக் ஆகி உள்ளனர்.

த்ரிஷா ஒரு படத்தில் நடிக்கின்றார் என்றாலே, ரசிகர்கள் குஷி ஆகிவிடுவார்கள். முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்டோருக்கு திரையில் மிகவும் பொருத்தமான ஜோடி என நடிகை த்ரிஷாவை ரசிகர்கள் கூறுவது உண்டு. குறிப்பாக விஜய்க்கு பக்காவான ஆன் ஸ்க்ரீன் ஜோடி என திரை உலகினரே பலரும் கூறியுள்ளனர். நடிகை த்ரிஷா தொடக்கத்தில் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவ கதைகளில் நடித்தாலும், அதன் பின்னர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகின்றார்.

தமிழ்நாட்டினைச் சேர்ந்த தமிழ் பொண்ணான த்ரிஷா, தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகின்றார். குறிப்பாக தெலுங்கில் இன்றைக்கும் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தமிழ் சினிமாவில் சீனியர் நடிகையாக மாறிவிட்டார், இனி இவரை வைத்து படங்கள் இயக்குவது என்பது வணிக ரீதியாக எடுபடுமா என்ற கேள்வியை பல சீனியர் நடிகைகள் எதிர் கொண்டுள்ளனர். ஆனால் த்ரிஷாவுக்கு அப்படியான் சூழல் இதுவரை வந்ததில்லை.

குந்தவை: கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் குந்தவையாக நடித்த த்ரிஷா, இந்தக் கதாபாத்திரத்திற்கு தன்னைவிட பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது எனக் கூறும் அளவிற்கு தரமான நடிப்பினை வெளிப்படுத்தினார். படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் படக்குழு வெளியிட்ட இவரது புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. படத்தின் ரிலீஸின்போது, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை குந்தவை என மாற்றி வைத்துக் கொண்டார். இதனால் தனது எக்ஸ் பக்கத்துக்கான ப்ளூ டிக்கையும் இழந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு இணையாக அழகிலும் நடிப்பிலும் மெச்சத் தகுதியானவர் என பலரும் பாராட்டினர்.

கோட்: இப்படியான நிலையில், சமீபத்தில் வெளியான விஜய்யின் கோட் படத்தில் நடிகை த்ரிஷா, 'மட்ட' பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை சர்ப்ரைஸின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டார். இதுமட்டும் இல்லாமல், அஜித்தின் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கின்றார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கெட்ட வார்த்தை: நடிகை த்ரிஷா தனக்கு கிடைக்கும் ஓய்வு நாட்களில் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது மொரோக்கோ சென்றுள்ள த்ரிஷா அங்கு தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்களுடன் பாடல் ஒன்றையும் சேர்த்துள்ளார். அந்தப் பாடல் ஃபிரென்ச் பாப் பாடகி நைகாவால் பாடப்பட்ட பாடல். இந்தப் பாடலுக்கு Sauce என பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் பாடலினை தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் இணைத்துள்ளார் த்ரிஷா. இந்தப் பாடலில் ஒரு கெட்டவார்த்தை இடம் பெற்றுள்ளதால், த்ரிஷாவின் ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளார்கள். மேலும் பலர் பாப் பாடல்களில் கெட்டவார்த்தைகள் மிகவும் சாதாரணமாக இருக்கும். இவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை எனவும் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











