விஷயம் தெரிந்தவர்களுக்கு மட்டும் புரியும்.. இந்த நேரத்தில் இது தேவையா? த்ரிஷா சொல்ல வருவது என்ன?

சென்னை: நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்துள்ள போஸ்ட் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக விஜய் மற்றும் த்ரிஷா குறித்து கடந்த சில நாட்களாக பலவிதமான கிசுகிசுக்கள் பரவி வரும் சூழலில், இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.

த்ரிஷாவின் இன்ஸ்டா போஸ்ட்: தனது ஸ்டோரியில் "IYKYK" என்று த்ரிஷா குறிப்பிட்டுள்ளார். இதன் விரிவாக்கம் "If You Know, You Know" என்பதாகும். அதாவது, விஷயம் தெரிந்தவர்களுக்கு மட்டும் புரியும் என்ற அர்த்தத்தில் இந்த வாசகம் சமூக வலைதளங்களில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், அவர் பகிர்ந்திருந்த புகைப்படத்தில் பலர் பேசிக்கொண்டிருக்கும் கார்டூன் வடிவிலான படம் இடம்பெற்றிருந்தது. இதனால், சமூக வலைதளங்களில் பரவி வரும் பேச்சுகள், கிசுகிசுக்கள் மற்றும் வதந்திகளுக்கு மறைமுகமாக அவர் பதிலளித்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Vijay Trisha
Photo Credit:

என்ன சொல்ல வரீங்க: இந்த ஸ்டோரியை பார்த்த இணையவாசிகள் ஏற்கனவே நாங்க குழம்பி இருக்கோம்... இதில் இது வேறையா?" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சிலர், "த்ரிஷா சொல்ல வருவது என்ன? என பல்வேறு கோணங்களில் இந்த பதிவை விவாதித்து வருகின்றனர். எனினும், இந்த பதிவில் எந்த நபரையும் த்ரிஷா நேரடியாக குறிப்பிடவில்லை.

த்ரிஷாவால் சர்ச்சை: தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் என் கணவருக்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருக்கிறது என்றும், அந்த உறவை அவர் கைவிடாததால் இருவரும் பிரிந்துவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு வெளியானதை தொடர்ந்து அனைவரும் அந்த நடிகை த்ரிஷா என வெளிப்படையாகவே பதிவிட்டு வந்தனர். அதோடு மட்டுமில்லாமல் இருவரும் திருமண நிகழ்ச்சி ஒரே காரில் சென்று இருந்ததும், வாக்கு எண்ணிக்கையின் போது விஜயின் நீலாங்கரை வீட்டுக்கு த்ரிஷா வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X