Trisha: திரிஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி.. குவியும் கண்டனம்!

சென்னை: விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார் சங்கீதா. இது குறித்த விவாதங்கள் சமூகவலைதளத்தில் அனல் பறந்து கொண்டு இருக்கிறது. இதையடுத்து நேற்று, திருவான்மியூரில் நடைபெற்ற திருமண விழாவில் விஜய், த்ரிஷா ஒன்றாக கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.

நேற்று திருவான்மியூரில் ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண விழாவில், தமிழக வெற்றக்கழக தலைவர் விஜயும், த்ரிஷாவும் ஒரே காரில், ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தனர். மேலும், மணமக்களை சந்தித்த இவர்கள் ஜோடியாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருந்தனர். இந்த வீடியோ, இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்த போது, பலரும் இது விஜய்யை வீழ்த்த நடக்கும் சதி, தேர்தல் நேரத்தில் சங்கீதா இதை செய்து இருக்கக்கூடாது என விஜய்க்கு ஆதரவாக பலரும் பேசினார்கள். ஆனால், நேற்று திரிஷாவுடன் விஜய் ஜோடிப்போட்டு வந்ததை பார்த்து கொந்தளித்துப்போன ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பலரும் திரிஷாவை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பகிர்ந்து சோஷியல் மீடியாவே திண்டாடி வருகிறது.

Vijay Trisha instagram
Photo Credit:

இன்ஸ்டாகிராம் பதிவு: இப்படி ஒரு பக்கத்தில் சர்ச்சை புகைந்து கொண்டு இருக்க நடிகை திரிஷா இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இன்ஸ்டாகிராமில் திருமண வரவேற்புக்கு செல்வதற்கு முன் எடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் செல்ல நாய் குட்டியின் போட்டோவையும் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். மேலும், செம ஜாலியாக நண்பர்களுடன் ஆட்டம் போட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் பலர், எதை பற்றியும் திரிஷாவிற்கு கவலையே இல்லை என்றும், இந்த நேரத்தில் திரிஷா இப்படி செய்யலாமா என கேட்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தன்னை பற்றி எந்த கருத்து வந்தாலும், அதற்கு நேரடியாக பதிலளிக்கும் திரிஷா, தற்போது இணையத்தில் பரவி வரும் எந்த செய்திக்கும் பதிலளிக்காமல், மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக்கொள்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X