Valentine day: திரிஷாவின் புதிய வாலன்டைன்.. என்ன அணைப்பு.. பேரு சும்மா அசத்துதே!

சென்னை: நடிகை திரிஷா மீண்டும் விஜய். அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவருக்கு மட்டும் வயதே ஆகாதா என்ற கேள்வி தொடர்ந்து இவர் மீது வைக்கப்படுகிறது. சமீபத்தில் அஜித்துடன் திரிஷா நடித்திருந்த விடாமுயற்சி படம் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சில விமர்சனங்களையும் இந்த படம் பெற்ற நிலையில் அடுத்ததாக மீண்டும் குட் பேட் அக்லி படத்தில் அஜித்துடன் நடித்து வருகிறார் திரிஷா.

தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யாவுடன் சூர்யா 45 படத்திலும் இணைந்துள்ளார். தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் இணைந்து வருகிறார் திரிஷா.

Trisha Valentine day Valentine

நடிகை திரிஷா: நடிகை திரிஷா தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடனும் இயக்குநர்களுடனும் இணைந்து நடித்து வரும் திரிஷாவிற்கு கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2 மற்றும் முன்னதாக வெளியான பொன்னியின் செல்வன் 2 படங்கள் மிக சிறப்பாக அமைந்தன. அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த திரிஷாவுக்கு சில காலங்கள் சரியான பட வாய்ப்புகள் அமையாத நிலையில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்தன.

அடுத்தடுத்த படங்கள்: பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் மிக அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் திரிஷா. இந்நிலையில் அடுத்தடுத்து விஜய், அஜித், சூர்யா என மீண்டும் முதலில் இருந்து தன்னுடைய பயணத்தை துவங்கியுள்ளார். விஜய்யுடன் அடுத்தடுத்து லியோ மற்றும் கோட் படங்களில் நடித்து மிக சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த திரிஷா நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடாமுயற்சி படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தில் அஜித்துடன் நடித்துள்ளார். படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்ததாக மீண்டும் அஜித்துடன் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார்.

திரிஷாவின் வாலன்டைன்: இந்நிலையில் சூர்யா 45 படத்தில் சூர்யாவுடன் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் இணைந்துள்ளார். சமூக வலைதளங்களிலும் அடுத்தடுத்த பதிவுகளால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார் திரிஷா. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. வாலன்டைன்ஸ் டேவை முன்னிட்டு அவர் தன்னுடைய வேலன்டைனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளதாக இந்த போஸ்டில் தெரிவித்துள்ளார். தனக்கு ஒரு வெளிச்சம் தேவைப்பட்டபோது அந்த நாய்க்குட்டியை தனக்கு பரிசளித்த லோகேஷ் பாலசந்தருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ஸி என்று அந்த நாய்க்குட்டிக்கு பெயரை வைத்துள்ளார்.

திரிஷா வெளியிட்ட வீடியோ: இஸ்ஸியின் அடுத்தடுத்த நகர்வுகளை க்யூட்டான வீடியோவாக பதிவு செய்து அதையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் திரிஷா. த்ரிஷா மட்டுமில்லாமல் அவரது அம்மா உமா கிருஷ்ணனும் அந்த நாய்க்குட்டியை அணைத்தபடி காணப்படுவது சிறப்பாக பார்க்கப்படுகிறது. தான் அந்த நாய்க்குட்டியை தத்தெடுத்ததாகவும் ஆனால் தன்னை இஸ்ஸி பாதுகாத்ததாகவும் திரிஷா மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார். தனக்காக கடவுள் கொடுத்த பரிசு என்றும் தன்னுடைய வாலன்டைன் என்றும் திரிஷா கூறியுள்ளார். இஸ்ஸிக்காக அழகான குட்டி வீட்டையும் செட் செய்துள்ளார் திரிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X