நீங்க மாஸ்னா..நான் பக்கா மாஸ்..பாலிவுட்டுக்கு டஃப் கொடுக்க களமிறங்கும் த்ரிஷா!
சென்னை: தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ள நடிகை த்ரிஷா, பாலிவுட்டில் ரீ என்ட்ரியாக உள்ளார்.
மிஸ்டர் மெட்ராஸ் அழகி பட்டத்தை பெற்றவர் நடிகை திரிஷா. மாடலிங் துறையில் சாதிக்க நினைத்தவருக்கு சினிமாவில் சின்ன வேடங்கள் கிடைத்தன. சிம்ரன், பிரசாந்த் நடித்த ஜோடி படத்தில் சிம்ரனின் கல்லூரி தோழியாக நடித்திருந்தார். லேசா லேசா படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கெல்லம் சீனியர் இவர். படிப்படியாக இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க துவங்கினார்.

விஜயுடன் திருப்பாச்சி, கில்லி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மாறி மாறி நடித்த நடிகை இவர். தெலுங்கிலும் இவருக்கென ஒரு மார்க்கெட் உண்டு. மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கெல்லாம் ஜோடி போட்டு நடித்துள்ள இவர், சிம்பு, தனுஷ், விக்ரம் சூர்யா, விஷால், ஜெயம் ரவி, ரஜினி, கமல், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
பொன்னியின் செல்வன்: கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் இவர் நடித்த விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் சிம்பு மற்றும் த்ரிஷாவின் ரொமான்ஸ் சும்மா அல்டிமேட்டாக இருக்கும். த்ரிஷாவின் சினிமா கேரியரில் இத்திரைப்படம் மறக்க முடியாத திரைப்படமாகும். இதன் பிறகு ஒரு சில ஹிட் படங்களில் நடித்து வந்த த்ரிஷா திடீரென படங்களில் தென்படாமல் போனார். இதையடுத்து, மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருந்தார். இந்த படம் பெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. குறிப்பாக த்ரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரத்திற்கு வரவேற்பு கிடைத்தது.
இரண்டாவது இன்னிங்ஸ்: இந்த படத்திற்கு பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கும் த்ரிஷா, விஜய்யுடன் மீண்டும் ஜோடி போட்டு லியோ படத்தில் நடித்தார். இந்த படமும் வசூலை அள்ளியது. இந்த படத்தை தொடர்ந்து அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைசானில் நடந்து வருகிறது. இப்படி அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நடிகை த்ரிஷாவிற்கு பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்க வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட்டில் ரீ என்ட்ரி: அதாவது, நடிகை த்ரிஷா, சல்மான் கான் அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட்டாகி உள்ளார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு 'தி புல்' என்று தலைப்பு வைக்கப்படவுள்ளது. 1988ம் ஆண்டு, 'ஆபரேஷன் காக்டஸ்' என்ற இராணுவ நடவடிக்கை இருந்தது, மாலத்தீவு ஜனாதிபதியைப் பாதுகாக்க இந்திய இராணுவம் இந்த நடவடிக்கையைத் திட்டமிட்டது. இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுக்க படக்குழுத் திட்டமிட்டுள்ளது. நடிகை த்ரிஷா 2010ல் அக்ஷய் குமார் நடித்த கட்டமீட்டா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவருக்கு அதன் பிறகு இந்தியில் வாய்ப்புகள் வரவில்லை. தற்போது 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தனக்கு பிடித்த நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் சல்மான் கான் ராணுவ அதிகாரியாக நடிக்கவுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.


Click it and Unblock the Notifications











