Actress Trisha: 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவியுடன் இணைந்த த்ரிஷா!

சென்னை: நடிகை திரிஷா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த லியோ படம் கடந்த ஆண்டில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சாதனை படைத்தது. தொடர்ந்து தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து பாலிவுட்டில் சல்மான்கான் -விஷ்ணு வர்தன் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்திலும் திரிஷா கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக டோலிவுட் சூப்பர்ஸ்டாருடனும் திரிஷா இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக கமல்ஹாசனின் தக் லைஃப் படத்திலும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் அடுத்தடுத்த பாகங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார் திரிஷா. அவருக்கு இந்தப் படங்கள் மூலமாக அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. 40 வயதான போதிலும் என்றும் மார்க்கண்டேயன் என்ற சொல்லுக்கு உதாரணமாக இருக்கிறார் திரிஷா. தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிப் படங்களில் கமிட்டாகி வரும் திரிஷாவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அவரது ரசிகர்கள் திரிஷாவின் அடுத்தடுத்த படங்களால் உற்சாகமடைந்து வருகின்றனர்.

Actress Trisha joined with Tollywood megastar Chiranjeevi after 18 years

நடிகை திரிஷா: நடிகை திரிஷா பல ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தென்னிந்திய அளவில் ஏறக்குறைய அனைத்து நடிகர்களுடனும் நடித்துள்ள திரிஷாவிற்கு பொன்னியின் செல்வன் படங்கள் ரீ என்ட்ரியாக அமைந்துள்ளன. இந்தப் படத்தில் குந்தவையாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தன்னுடைய மார்க்கெட்டையும் உயர்த்தியுள்ளார். தொடர்ந்து விஜய்யுடன் அவர் நடித்திருந்த லியோ படம் கடந்த ஆண்டில் வெளியாகி அவருக்கு மாஸாக அமைந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் 600 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்துள்ளது.

அடுத்தடுத்த படங்கள்: இந்தப் படங்களை அடுத்து தற்போது அஜித்தின் விடாமுயற்சி மற்றும் கமல் -மணிரத்னம் காம்பினேஷனில் உருவாகிவரும் தக் லைஃப் ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் சல்மான் கான் -விஷ்ணு வர்தன் காம்பினேஷனில் உருவாகவுள்ள படத்தில் திரிஷா இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டோலிவுட்டிலும் தற்போது நடிகர் சிரஞ்சீவியுடன் திரிஷா புதிய படத்தில் இணைந்துள்ளார். 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

சிரஞ்சீவியுடன் ஜோடி: தெலுங்கு படவுலகில் மெகாஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் சிரஞ்சீவி அடுத்ததாக மல்லிடி வஷிஷ்டா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. 68 வயதான சிரஞ்சீவி தற்போதும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் இணைந்துள்ள திரிஷாவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள சிரஞ்சீவி படத்தின் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார். யூவி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது.

கடுப்பில் திரிஷா: தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார் திரிஷா. இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடந்துவந்த நிலையில் பல்வேறு காரணங்களால் படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போனது. இதனால் தன்னுடைய மற்ற கமிட்மெண்ட்களை தொடர முடியாமல் முழிப்பிதுங்கி வருகிறார் திரிஷா. பாலிவுட்டிலும் சல்மானுடன் நடிக்கவுள்ள நிலையில், விடாமுயற்சி படத்தால் டேட்ஸ் பிரச்சினை ஏற்படும் என்று அவர் கவலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X