Trisha: ‘காதல்‘ குறித்து த்ரிஷாவின் பதிவு.. விஜய் சிஎம் ஆனதுமே.. இப்படி ஒரு பதிவா?

சென்னை: நடிகராக இருந்த விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 108 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி தமிழக முதலமைச்சராக நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பதவியேற்பு விழாவில் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக அதில், நடிகை த்ரிஷா கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றது. விஜய்யுடன் பல வெற்றி படங்களில் நடித்துள்ள த்ரிஷா, விழாவில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

Vijay Trisha TVK Vijay
Photo Credit:

த்ரிஷா போஸ்ட்: இந்த நிலையில், பதவியேற்பு விழாவுக்கு பிறகு நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "The love is always louder" என்று பதிவிட்டுள்ளார். இதன் தமிழ் அர்த்தம், "அன்பின் குரல்தான் எப்போதும் அதிகமாக ஒலிக்கும்" என்பதாகும். இந்த ஒரு வரி பதிவு தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த்ரிஷாவின் இந்த பதிவு யாரை குறிப்பிட்டு சொல்லப்பட்டது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. சிலர், விஜய்க்கு கிடைத்த மக்களின் பேராதரவை சொல்லும் விதமாக த்ரிஷா இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்றும், சிலர், விஜய் - த்ரிஷா நட்பு குறித்து நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் வதந்திகளுக்கு இது மறைமுக பதிலாக இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.

கண்கலங்கிய த்ரிஷா: விஜய்யின் பதவியேற்பு விழாவில் மனைவி, மகன், மகள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் த்ரிஷா கலந்து கொண்டதும், விஜய் மேடையில் பேச பேச கண்கலங்கியதும் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், நடிகை த்ரிஷாவின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் மேலும் விவாதத்தை அதிகரித்துள்ளது. இதேவேளை, விஜய்யின் அரசியல் பயணத்தில் த்ரிஷா தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கிறாரா... இல்லை கட்சியில் இணைகிறாரா என்ற கேள்வியும் இணையத்தில் பேசப்படுகிறது. எனினும், த்ரிஷா தனது பதிவுக்கு எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், இந்த ஒரு வரி தற்போது இணைய உலகின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X