Trisha: சைக்கிள் ஓட்டும் பட்டாம்பூச்சி.. இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ!
சென்னை: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் நடிகை த்ரிஷா நியூயார்க்கில் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துத் தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகையாக மாறிப்போனார்.

இவர் தமிழ் சினிமாவில் நுழைந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகியும் தற்போதும் டாப் நடிகையாகவே இருக்கிறார்.
96 திரைப்படம்: அஜித்துடன் இணைந்து இவர் நடித்த மங்காத்தா படத்திற்கு பிறகு இவருக்கு படவாய்ப்பு சரியாக அமையாததால்,தவிர்த்து வந்தார். அப்போது தான் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 திரைப்படத்தில் நடித்தார். பள்ளிக்காதலை வைத்து அழகாக உருவான இத்திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது.
குந்தவை: 96 திரைப்படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்த த்ரிஷா,மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்து மீண்டும் பார்முக்கு வந்துள்ளார். வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் த்ரிஷாவின் நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தி ரோடு: தற்போது த்ரிஷா விஜய்யின் லியோ படத்தில், மலையாளத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக ராம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதேபோல உண்மை சம்பவத்தை அடிப்படையக்கொண்டு உருவான தி ரோடு திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் 6ந் தேதி வெளியாக உள்ளது.
அடுத்தடுத்த படங்களில்: மேலும், அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷாவை நடிக்கவைக்க படக்குழுவினர் நடத்திய பேச்சு வார்த்தை முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. சல்மான் கான் நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
குவியும் லைக்குகள்: அடுத்தடுத்த படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கும் த்ரிஷா, தற்போது நியூயார்க்கில் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நியூயார்க் தெருவில் சைக்கிள் ஓட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











