Don't Miss!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Finance
இந்தியாவை விட இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசத்தில் பெட்ரோல் விலை குறைவு.. ஆய்வறிக்கை வெளியீடு!
- News
கனமழை வெளுத்து வாங்க போகுது! பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! கவனமாக இருங்க மக்களே..!
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பொன்னியின் செல்வன் படத்திற்காக சொந்தக் குரலில் டப்பிங்... வேற லெவல் த்ரிஷா
சென்னை : நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட்டில் தடம் பதித்து வருகிறார்.
ரஜினி உள்ளிட்ட முக்கிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் த்ரிஷா.
சாரல் சாரல் காற்றே...அசுத்தலாக ரொமான்ஸ் பொங்கும் அண்ணாத்த செகண்ட் சிங்கிள்
தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள த்ரிஷா, அந்த கேரக்டருக்காக சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளார்.

நடிகை த்ரிஷா கிருஷ்ணன்
நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார். கோலிவுட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். இவருக்கென்று தனியாக ரசிகர்கள் காணப்படுகின்றனர். தேர்ந்தெடுத்த கதைகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

பொன்னியின் செல்வன் படம்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் குந்தவை கேரக்டரில் நடித்துள்ளார் த்ரிஷா. எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை இரண்டு பாகங்களாக மணிரத்னம் ரிலீஸ் செய்யவுள்ளார்.

டப்பிங் பணிகள் ஜரூர்
முதல் பாகத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது டப்பிங் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டில் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தற்போது படத்தில் வானவன் மாதேவியாக நடித்துள்ள பரத நாட்டிய கலைஞர் வித்யா சுப்ரமணியனை தொடர்ந்து இந்தப் படத்தில் தற்போது த்ரிஷா தனது டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார்.

டப்பிங் செய்த த்ரிஷா
அதிகமான படங்களில் நடித்திருந்தாலும் சில படங்களில் மட்டுமே தனது கேரக்டருக்காக குரல் கொடுத்துள்ளார் த்ரிஷா. மாறாக அவருக்கு மற்ற டப்பிங் கலைஞர்களே டப்பிங் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தில் தன்னுடைய கேரக்டருக்கு தானே தனது சொந்தக்குரலில் டப்பிங் செய்து வருகிறார் த்ரிஷா.

ஏஆர் ரஹ்மான் இசை
பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கலை இயக்குநர் தோட்டா தரணியின் ஆர்ட் வொர்க் படத்திற்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது. ரவி வர்மன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பொன்னியின் செல்வன் நாவல் படிப்பவர்கள் அனைவருக்கும் சிறப்பான அனுபவத்தை கொடுத்துள்ள நிலையில் தற்போது இந்தப் படம் அத்தகைய தாக்கத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.