Trisha: என்னிடம் கேள்வி கேளுங்கள்.. நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்!

சென்னை: தமிழ் சினிமாவில் எவர் கிரீன் நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கு, தற்போது, இன்ஸ்டாகிராமி ஸ்டோரியில் இவர் பகிர்ந்து இருக்கும், லேட்டஸ்ட் போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

சிம்ரன், பிரசாந்த் நடித்த ஜோடி திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை த்ரிஷா. அந்த திரைப்படத்தை தொடர்ந்து மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அந்த படத்தை தொடர்ந்து அடுத்த பல முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து முன்னணி நடிகையென பெயர் எடுத்தார்.

Trisha krishnan instagram
Photo Credit:

நடிகை த்ரிஷா கிருஷ்ணன்: தமிழ், தெலுங்கு, கன்னடம் என அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த, த்ரிஷாவிற்கு திடீரென பட வாய்ப்பு குறைந்து போனது. இதையடுத்து, மணி ரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் த்ரிஷா குந்தவை என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் டிரெண்டுக்கு வந்த நடிகை த்ரிஷா விஜய்யுடன் லியோ படத்தில் விஜய்யின் மனைவியாக நடித்தார். இதையடுத்து அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, போன்ற படத்தில் நடித்தார்.

இன்ஸ்டாகிராம் போட்டோஸ்: தற்போது, ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கு கருப்பு படத்தில் நடித்து உள்ளார். மேலும் இதில்,யோகி பாபு, ஸ்வாசிகா ஆகியோர் நடித்துள்ளனர். 'மௌனம் பேசியதே' படத்திற்கு பின் சூர்யா, த்ரிஷா இருவரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், நடிகை த்ரிஷா தற்போது இன்ஸ்டாகிராமில் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டில் ஜாலியாக பொழுதை கழிப்பதில் ஈடுபாடு கொண்ட திரிஷா, தனது பெண் தோழிகளுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவிற்கு இணையத்தில் லைக்குகள் மலை போல குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X