நடிகைகள் பேசத் தயங்கும் விஷயம்.. மெனோபாஸ் பற்றி ஓப்பனாக பேசிய த்ரிஷா!
சென்னை: நடிகர் பிரசாந்த், சிம்ரன் நடித்த 'ஜோடி' படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சின்ன ரோலில் நடித்து அறிமுகம் ஆனவர் தான் நடிகை திரிஷா. அதன் பின் சூர்யாவுடன் இணைந்து 'மௌனம் பேசியதே' படம் மூலம் கதாநாயகியாக மாறினார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவின் டாப் கியருக்குச் சென்று இருக்கும் திரிஷாவின் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'கருப்பு' திரைப்படம் வரை, 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
நடிகை திரிஷா: சினிமா, வெற்றிகள், சர்ச்சைகள் என எப்போதுமே செய்திகளில் இருக்கும் த்ரிஷா, தற்போது பெண்களின் பெரிமெனோபாஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்றுவிடும் 'மெனோபாஸ்' நிலைக்கு முந்தைய காலகட்டத்தைத்தான் மருத்துவ உலகம் 'பெரிமெனோபாஸ்' என்கிறது. "பெரிமெனோபாஸ் என்பது, உங்கள் உடலில் மகிழ்ச்சியைத் தரும் ஹார்மோன்கள் குறைந்து, எதைப் பற்றியும் கவலைப்படாத ஹார்மோன்கள் உங்கள் உடலை ஆதிக்கம் செலுத்தும் ஒரு நிலை என்று ஒருமுறை மருத்துவ நிபுணர் ஒருவர் விளக்கியதைக் கேட்டிருக்கிறேன். இந்த நிலையை இதைவிட யாராலும் இவ்வளவு சிறப்பாக விளக்கிவிட முடியாது என்று த்ரிஷா குறிப்பிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications