Trisha: பார்த்திபன் மகளுடன் த்ரிஷா.. அடடே மும்பை போனது இதுக்குத்தானா? பஞ்சாயத்து முடுஞ்சது போலயே!
நடிகை த்ரிஷா, தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். மூத்த நடிகையும் கூட. இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் சூர்யாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள படமான கருப்பு படம் தான். இந்த படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து படங்களிலும் கமிட் ஆகி வருகிறார் த்ரிஷா. சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்ச்சையில் த்ரிஷாவுக்கும் நடிகரும் இயக்குநருமான பார்த்திபனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் பேசுபொருளாக மாறியது. இப்படி இருக்கையில் நடிகை த்ரிஷா நேற்று அதாவது மார்ச் 13ஆம் தேதி சென்னையில் இருந்து மும்பைக்குப் புறப்பட்டார்.
அவர் மும்பை போனதற்காக பல காரணங்கள் சொல்லப்பட்ட நிலையில், நடிகை த்ரிஷா, நடிகரும் இயக்குநருமான பார்த்திபனின் மகள் கீர்த்தனா இயக்குநர் மணிரத்னம் மற்றும் அவரது குழு உள்ளிட்ட பலருடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அப்பாவுடன் இப்போதுதான் சண்டை ஒய்ந்தது, ஆனால் அதற்குள் மகளுடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருப்பார் போலயே என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

நடிகர் பார்த்திபன் மற்றும் த்ரிஷாவுக்கு இடையில் பிரச்னை ஏற்படக் காரணம் நிகழ்ச்சி ஒன்றில் த்ரிஷா குறித்து பார்த்திபன் தெரிவித்த சர்ச்சைக் கருத்துதான். ஆனாலும் அதை ஒளிபரப்ப வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாக அது பெரும் பேசு பொருளாக மாறியது.
வாக்குவாதம்: நடிகை த்ரிஷா நடிகர் விஜய் உடன் இணைந்து திருமணம் ஒன்றிக்குச் சென்றது பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி மிகவும் காட்டமாக விமர்சித்தார். ஆனாலும் அவர் மேடையில் அந்த விமர்சனத்தை வைக்கவில்லை. அவர் தனது சக சினிமா நண்பர்களுடன் பேசுகையில் காட்டமான விமர்சனத்தை தெரிவித்திருந்தார். ஆனாலும் அந்த வீடியோவுமே ரசிகர் ஒருவரால் பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்டதே.
பஞ்சாயத்து ஓவரா: சமுத்திரக்கனியை கண்டிக்காத த்ரிஷா பார்த்திபனைக் கண்டித்தார். தொடக்கத்தில் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட பார்த்திபன், அதன் பின்னர் த்ரிஷாவை காட்டமாக விமர்சித்தார். இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வார்த்தைப் போர் ஒரு வழியாக முடிவுக்கு வர தற்போது த்ரிஷாவும் பார்த்திபன் மகளும் ஒன்றாக இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் பஞ்சாயத்து மொத்தமாக ஓவர் போலயே என்று கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











