பொன்னியின் செல்வன் படத்தால் அடித்த யோகம்.. த்ரிஷாவின் கைவசம் உள்ள படங்கள் எத்தனை தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் த்ரிஷா. இவர் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக ஹீரோயினாக மட்டுமே நடித்து வருகிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. சினிமாவில் சில நாட்கள் காணாமல் போன த்ரிஷா, பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வரும் த்ரிஷா, தற்போது எட்டு படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த த்ரிஷா,மௌனம் பேசியதே படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் நடிப்பில் வெளியான கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா என பெரிய ஹிட் கொடுத்த படத்தை ரசிகர்களால் என்றுமே மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு அந்த படங்கள் மாஸ்டர் பீஸ் படங்கள் ஆகும்.

Actress Trisha Krishnan upcoming 8 movies

நடிகை த்ரிஷா: சில ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தலைகாட்டாமல் தெலுங்கில் நடித்து வந்த த்ரிஷாவிற்கு பொன்னியின் செல்வன் படம் மாஸ் என்ட்ரியை கொடுத்துள்ளது. அந்த படத்தில் இவர் நடித்த குந்தவை கதாபாத்திரம் இவருக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தது. இந்த படத்தைத் தொடர்ந்து அவரது கைவசம் இப்போது 8 படங்கள் இருக்கிறது.

படங்களில் பிஸி: கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடிக்கிறார். இதற்கு அடுத்தபடியாக அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படமும் திரிஷா கைவசம் தான் இருக்கிறது. கில்லி படத்திற்கு பிறகு த்ரிஷா, லியோ படத்தில் விஜய்யுடன் நடித்த நிலையில், இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் கேமியோ தோற்றத்தில் திரிஷா நடித்து வருவதாக கூறப்படுகிறது.

8 படங்கள் கைவசம்: அதேபோல் தெலுங்கு இயக்குநர் வசிஷ்ட மல்லிடி இயக்கத்தில் உருவாக உள்ள விஸ்வம்பரா படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவி, த்ரிஷாவுடன் சுரபி, இஷா சாவ்லா உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தில் த்ரிஷா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஆஸ்கர் வென்ற கீரவாணி இசையமைக்கிறார். 2025, ஜனவரி 10 ம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், மலையாளத்தில் மோகன்லாலின் ராம் ஆகிய படங்களில் திரிஷா நடித்து வருகிறார். அதேபோல டோவினோ தாமஸின் ஐடென்டிபை படத்திலும் திரிஷா தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், சோனி லைவ் சீரிஸில் உருவாகி வரும் பிருந்தா என்ற தொடரும் திரிஷாவின் கைவசம் உள்ளது. இப்படி த்ரிஷா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிற்கக்கூட நேரம் இல்லாமல் செம பிஸியாக இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X