Actress Trisha: லெஜெண்ட்களுடன் புகைப்படம்.. க்யூட் சிரிப்பால் கவர்ந்த த்ரிஷா!

சென்னை: நடிகை திரிஷா கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்துள்ளார். கடந்த ஆண்டில் நடிகர் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார் திரிஷா. இந்தப் படத்தில் விஜய் மற்றும் திரிஷாவின் கூட்டணி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இந்தப் படத்தின் மூலம் இணைந்திருந்தனர். இந்நிலையில் அடுத்ததாக விஜய்யுடன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திலும் நடித்துள்ளார். இதன் ஷூட்டிங்கை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபு நிறைவு செய்துள்ளார்.

இதனிடையே அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்திலும் இணைந்து நடித்து வருகிறார் திரிஷா. இதனிடையே சிரஞ்சீவியுடன் விஸ்வம்பர படத்திலும் இணைந்து நடித்து வருகிறார். இயக்குநர் வசிஷ்டா இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்திற்கு பிரபல ஆஸ்கர் வின்னர் கீரவாணி இசையமைத்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் முன்னதாக வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress Trisha new photos with Chiranjeevi and Keeravani in Instagram

நடிகை திரிஷா: நடிகை திரிஷா 20 ஆண்டுகளைக் கடந்த தன்னுடைய திரைப்பயணத்தில் தற்போது வரை முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் நடிகை திரிஷா. தற்போது தன்னுடைய ரீ என்ட்ரியிலும் சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி மற்றும் கிஸ்ஸிங் சீன் ஆகியவை மிகச் சிறப்பாக பார்க்கப்பட்டது.

விஜய்யுடன் அடுத்தடுத்த படங்கள்: இதனிடையே தற்போது மீண்டும் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திலும் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார். அஜித்துடன் விடாமுயற்சி மற்றும் கமல்ஹாசனுடன் தக் லைஃப் படங்களிலும் நடித்து வருகிறார் திரிஷா. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும் திரிஷா நடித்து வருகிறார். மேலும் பாலிவுடிலும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா படத்தில் இணைந்துள்ளார் திரிஷா. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரஞ்சீவியுடன் அடுத்தப்படம்: இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகர் சிரஞ்சீவி மற்றும் இசையமைப்பாளர் கீரவாணியுடன் இணைந்து திரிஷா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். லெஜெண்ட்களுடன் இணைந்து இந்த காலை சிறப்பாக அமைந்துள்ளதாக திரிஷா வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து லைக்ஸ்களையும் அள்ளி வருகிறது. மேலும் திரிஷாவிற்கு மட்டும் வயதே ஆகாதா என்றும் வயது ரிவர்ஸ் கியரில் பயணிக்குமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜீன்ஸ் -ஷர்ட்டில் எளிமையாக காணப்பட்டாலும் தன்னுடைய புன்னகை மூலம் இந்தப் புகைப்படத்திற்கு வண்ணத்தை சேர்த்துள்ளார் திரிஷா.

அடுத்தடுத்த படங்கள்: நடிகை திரிஷாவின் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தன. மணிரத்னம் இயக்கத்தில் மல்ட்டி ஸ்டாரர் படமாக வெளியான இந்தப் படங்களில் குந்தவை என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார் திரிஷா. படத்தில் திரிஷா -கார்த்தி காம்பினேஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. தன்னுடைய ரீ என்ட்ரியை மிகவும் சிறப்பாக அமைத்து வருகிறார் திரிஷா. அந்த வகையில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X