Actress Trisha: என்னை இழு இழு இழுக்குதடி.. திரிஷாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

சென்னை: நடிகை திரிஷா 22 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவு செய்துள்ளார். இதன் கொண்டாட்டத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யா 45 படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார் திரிஷா. இந்தக் கொண்டாட்டத்தின்போது சூர்யா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட சூர்யா 45 படக்குழுவினர் உடனிருந்தனர்.

அடுத்தடுத்து விஜய், அஜித், சூர்யா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தென்னிந்திய அளவில் இணைந்து படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. இந்நிலையில் வரும் 2025ம் ஆண்டும் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இதன் முன்னோட்டமாக வரும் ஜனவரி மாதம் பொங்கல் கொண்டாட்டமாக அஜித்துடன் திரிஷா நடித்துள்ள விடாமுயற்சி படம் ரிலீசாக உள்ளது. அடுத்தடுத்த படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

trisha vidaamuyarchi movie instagram

நடிகை திரிஷா: நடிகை திரிஷா 20 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இவர் தன்னுடைய 22 ஆண்டு திரைப்பயணத்தை நிறைவு செய்ததன் அடையாளமாக சூர்யா 45 படக்குழுவின்ருடன் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த கொண்டாட்டத்தின்போது நடிகர் சூர்யா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் உடனிருந்தனர். தற்போது அடுத்தடுத்த முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் திரிஷா. தன்னுடைய கேரியரின் துவக்கத்தில் இருந்தே இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

trisha vidaamuyarchi movie instagram

ரீ என்ட்ரியில் மாஸ்: இந்நிலையில் தற்போது தன்னுடைய ரீ-என்ட்ரியிலும் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் திரிஷா. இவை மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் இவர் அடுத்தடுத்து நடித்து வருவதை பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டில் விஜய்யுடன் திரிஷா ஜோடி சேர்ந்து லியோ படத்தில் நடித்திருந்தார். இந்தப்படத்தில் விஜய்யுடனான இவரது கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான கோட் படத்திலும் மகன் விஜய்யுடன் இணைந்து சூப்பராக ஆட்டம் போட்டிருந்தார்.

trisha vidaamuyarchi movie instagram

அடுத்தடுத்த படங்கள்: யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படத்தின் இந்தப்பாடல் ரசிகர்களை வெகு சிறப்பாக கவர்ந்திருந்தது. இந்நிலையில் அடுத்ததாக அஜித்துடன் திரிஷா நடித்துள்ள விடாமுயற்சி படம் வரும் ஜனவரியில் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக அஜித்துடன் குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சூர்யாவுடன் சூர்யா 45 படத்திலும் கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார் திரிஷா. இவை மட்டுமில்லாமல் மலையாளத்தில் மற்றும் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படங்கள்: தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் திரிஷா. இந்நிலையில் திரிஷாவை சுற்றி சர்ச்சைகளும் பஞ்சமில்லாமல் வலம்வந்து கொண்டிருக்கின்றன., நடிகர் விஜய்யுடன் இணைந்து சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு தனி விமானத்தில் திரிஷா சென்ற வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில் ஒருபுறம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் திரிஷா. தற்போது புதிய போட்டோஷூட் எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

trisha vidaamuyarchi movie instagram

அழகு அள்ளும் திரிஷா: இந்த புகைப்படங்களில் அவ்வளவு அழகாக இருக்கிறார் திரிஷா. இவருக்கு மட்டும் வயதே ஆகாதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பும் வகையில் இந்த புகைப்படங்களும் அவரது கெட்டப்பும் அவர் கொடுத்துள்ள போஸ்க்களும் காணப்படுகின்றன. மேலும் கேப்ஷனில் மௌனம், அமைதி மற்றும் நம்பிக்கை என்று தன்னுடைய பயணம் குறித்து கூறியுள்ளார் திரிஷா. இந்த புகைப்படங்களுக்கு அடுத்தடுத்து லைக்ஸ்களை ரசிகர்கள் அள்ளி தெளித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X