Trisha: திரிஷாவின் கலக்கல் போட்டோஷுட்.. இந்த புன்னகை என்ன விலை என கேட்கும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை திரிஷா விஜய், அஜித், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
20 ஆண்டுகளை கடந்த அவரது திரைப்பயணத்தில் தென்னிந்திய அளவில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

சமீபத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து திரிஷா நடித்திருந்த லியோ படம் வெளியாகி மாஸ் வெற்றியை கொடுத்துள்ளது.
நடிகை திரிஷா: நடிகை திரிஷா ஜோடி படத்தின்மூலம் கடந்த 1999ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார். தமிழில் நாயகியாக மெனளம் பேசியதே படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த திரிஷா, அடுத்துடுத்து நிற்க நேரமில்லாமல் வெற்றிக் கூட்டணியில் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித், விஷால், கார்த்தி, சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் திரிஷா.
அடுத்தடுத்த வெற்றிப் படங்கள்: இந்த ஆண்டில் திரிஷாவில் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன், லியோ படங்கள் சிறப்பாக அமைந்தன. வரலாற்று பின்னணியில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்களில் குந்தவையாகவே வாழ்ந்துக் காட்டினார் திரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் திரிஷாவிற்கு சிறப்பாக அமைந்தது. வசூலையும் குவித்தது. தொடர்ந்து விஜய்யுடன் திரிஷா நடித்திருந்த லியோ படம் வெளியாகி வசூல்மழை பொழிந்துள்ளது.

விடாமுயற்சி படத்தின் நாயகி: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார். அசர்பைஜானில் நடத்தப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக அங்கே சென்ற திரிஷா அடுத்தடுத்த லொகேஷன்களில் அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தார். அடுத்ததாக இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் டிசம்பர் 2வது வாரத்தில் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து கமல் -மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள KH234 படத்திலும் கமிட்டாகியுள்ளார் திரிஷா.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் திரிஷா. தன்னுடைய படங்களின் அறிவிப்புகள் மட்டுமில்லாமல் விதவிதமான போட்டோஷுட்களையும் எடுத்து அதன் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். லியோ படத்தின் சூட்டிங்கின்போது தொடர்ந்து விஜய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து இவர் பதிவிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிகமான லைக்ஸ்களையும் அள்ளிக் கொடுத்தன.

ரசிகர்களை கவர்ந்த போட்டோஷுட்: இன்ஸ்டாகிராமில் 6.6 மில்லியன் பாலோயர்கள் திரிஷாவை பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஸீ-த்ரூ புடவையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் திரிஷா வெளியிட்டுள்ள போட்டோஷுட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் புகைப்படங்கள் வெளியா சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றன. இந்தப் புகைப்படங்களில் வெட்கம், புன்னகை என அனைத்தையும் ரசிகர்களுக்கு பரிசாக்கியுள்ளார் திரிஷா.


Click it and Unblock the Notifications











