யார் சொன்னது ஏஞ்சல் சொர்க்கத்துல இருக்கும்னு.. திரிஷா போட்டோவை பார்த்து ஜொள்ளும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை திரிஷா ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.
நடிகை திரிஷா, பிரஷாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக தலைக்காட்டினார். அதனை தொடர்ந்து 2002ஆம் ஆண்டு வெளியான மவுனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார் திரிஷா. ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டுள்ளார் நடிகை திரிஷா.

ராணாவுடன் காதல்
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா இந்தியிலும் நடித்திருக்கிறார். நடிகை திரிஷாவும் பிரபல தெலுங்கு நடிகரான ராணாவும் காதலித்து வந்தனர்.

நிச்சயதார்த்தம்
ஆனால் அவர்களின் காதல் பிரேக்கப் ஆக, நடிகை திரிஷாவுக்கு திரைப்பட தயாரிப்பாளரான வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடிடைபெற்றது. ஆனால் அது நிச்சயதார்த்தத்துடன் நிறுத்தப்பட்டு திருமணம் நடைபெறாமல் போனது.

20 ஆண்டுகளாக..
தொடர்ந்து தன்னை சிங்கிள் என்று அறிவித்த நடிகை திரிஷா, படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். 36 வயதை கடந்துள்ள திரிஷா,கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கோலொச்சி வருகிறார்.

செம க்யூட்
இன்னும் அழகு பதுமையாக காட்சியளிக்கும் திரிஷா, தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஸ்லிவ்லெஸ் மெடி போன்ற உடையில் செம க்யூட்டாக உள்ளார் திரிஷா.
வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்
அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுங்கள் என்றும் தெரிவித்திருக்கிறார் திரிஷா. அதனை பார்த்த நெட்டிசன்கள் திரிஷாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.
கைக்கோர்க்கும்போது..
கடைசியாக ஜானு, ராமுடன் கைக்கோர்க்கும்போது என 96 படத்தை நினைவுபடுத்தியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
அமர்ந்திருக்கும் ஏஞ்சல்
குஷன் நாற்காலியில் அமர்ந்திருக்கும் தேவதை!
நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார் இவர்.
யார் சொன்னது
பூமியில் நீங்கள் இருக்கும்போது, யார் சொன்னது தேவதைகள் சொர்க்கத்தில் இருப்பார்கள் என்று என கேட்கிறார் இந்த ரசிகர்.
பேரழகு
அழகே பொறாமைப்படும் பேரழகு என பாகுபலி டயலாக்கை சொல்கிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











