Trisha: திருப்பதியில் மனமுருகி பிரார்த்தனை செய்த நடிகை த்ரிஷா!

சென்னை: நடிகை த்ரிஷா இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அனைவரும் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் த்ரிஷா திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

ஒட்டு மொத்த தமிழகமே இந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், ஏப்ரல் 23ந் தேதி பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில், ஜெயித்து யார் ஆட்சியை கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஆவலுடன் உள்ளனர். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

Trisha Vijay Tirupati

த்ரிஷா பிறந்த நாள்: இப்படி தமிழகமே பரபரப்பாக இருக்கும் நிலையில் நடிகை த்ரிஷா தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக நேற்று இரவே திருப்பதிக்கு காரில் செல்லும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, அதிகாலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அவருக்கு ரசிகர்கள் அனைவரும் 43வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சை: நடிகை த்ரிஷா அண்மையில் நடந்த தேர்தலில் த்ரிஷா தனது அம்மாவுடன் வந்து வாக்களித்திருந்தார். வாக்களித்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, கில்லி பட பாடல் உடன் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதனால் அவர் விஜய்யின் தவெக கட்சிக்கு தான் வாக்களித்து இருந்தார் என எல்லோருக்கும் தெரியவந்தது. தேர்தலுக்கு முன் த்ரிஷா நடிகர் விஜய் உடன் ஜோடியாக ஒரே நிற உடையில், ஒரே காரில் ஜோடியாக சென்று இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X