Trisha: அஜித்தான் என்னோட ஃபர்ஸ்ட் சாய்ஸ்.. அட திரிஷா இப்படி சொல்லியிருக்காங்களே!
சென்னை: நடிகை திரிஷா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள மொழிப் படங்களிலும் இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார்.அடுத்தடுத்து விஜய்யுடன் லியோ, கோட் படங்களிலும் நடித்துள்ளார்.
இதில் லியோ படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்த திரிஷா கோட் படத்தில் பாடலுக்கு மட்டும் ஆட்டம் போட்டிருந்தார். இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து கமல்ஹாசன், சிம்புவுடன் இணைந்து தக் லைஃப் படத்திலும் நடித்து முடித்துள்ளார். மீண்டும் அஜித்துடன் இணைந்து குட் பேட் அக்லி படத்திலும் நடித்துள்ளார்.

நடிகை திரிஷா: நடிகை திரிஷா 20 ஆண்டுகளை கடந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும் பாலிவுட்டிலும் இணைந்து நடித்து வருகிறார். 20 ஆண்டுகளை கடந்தும் முன்னணி நாயகியாகவே தன்னுடைய திரைப்பயணத்தை தொடாந்து வருகிறார். அடுத்தடுத்து விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுடனும் தமிழில் நடித்துள்ளார். கடந்த ஆண்டில் விஜய்யுடன் இணைந்து கோட் படத்திலும் முன்னதாக லியோ படத்திலும் நடித்துள்ளார். இந்த இரு படங்களுமே விஜய் -திரிஷா காம்பினேஷனை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியது.
அடுத்தடுத்த படங்கள்: இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது அஜித்துடன் திரிஷா நடித்து விடாமுயற்சி படம் கடந்த 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முன்னதாகவே இந்த ஜோடி சில படங்களில் நடித்துள்ள நிலையில் இந்தப் படத்தில் இவர்களின் காம்பினேஷன் சிறப்பாக பார்க்கப்பட்டது. இவர்கள் மீண்டும் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார்கள். இதனிடையே கமல்ஹாசன், சிம்பு கூட்டணியில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படங்களை போலவே மலையாளம் மற்றும் தெலுங்கிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
பேவரைட் ஹீரோ: சில காலங்கள் அதிகமான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்துவந்த திரிஷா அடுத்தடுத்து விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டவர்குளுடன் நடித்து வருவது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. சூர்யா 45 படத்திலும் திரிஷா இணைந்துள்ளார். இதனிடையே அஜித் குறித்து திரிஷா பேசியுள்ள பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் கவனத்தை பெற்று வருகிறது. அஜித்தான் தன்னுடைய பேவரிட் ஹீரோ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தான் நடிக்க வருவதற்கு முன்னதாகவே தன்னுடைய பேவரைட் ஹீரோ அஜித்தான் என்று அவர் கூறியுள்ளார்.
திரிஷா சாய்ஸ்: அடுத்ததாக தனக்கு பிடித்த ஹீரோ விக்ரம் என்றும் இவர்களை தொடர்ந்து சூர்யா மற்றும் விஜய் தன்னுடைய பேவரைட் லிஸ்ட்டில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அஜித் எப்போதுமே தன்னுடைய பேவரைட் லிஸ்ட்டில் ஒரு படி மேலே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். திரிஷா மற்றும் விஜய் குறித்து அடுத்தடுத்த பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் முன்னதாக தன்னுடைய பேட்டியில் அஜித்தான் தன்னுடைய பேவரைட் என்று கூறியுள்ளது அதிகமான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











