Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஃபெட்னா தமிழ் விழாவில் முதல் முறையாக பங்கேற்கிறார் த்ரிஷா!
சென்னை: அமெரிக்காவில் நடைபெறும் வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை (ஃபெட்னா) தமிழ் விழாவில் பங்கேற்க, நடிகை த்ரிஷா அமெரிக்கா சென்றார்.
இந்த விழாவில் த்ரிஷா பங்கேற்பது இதுவே முதல் முறை.
அமெரிக்காவின் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான ஃபெட்னா சார்பில் ஆண்டு தோறும் ஜூலை 4ம் தேதி வாக்கில் தமிழ் விழா கொண்டாடப்படுகிறது. தமிழறிஞர்கள், சாதனையாளர்கள், சின்னத்திரை, பெரிய திரை நட்சத்திரங்கள் பங்கேற்கிறார்கள்.
முதன் முறையாக த்ரிஷா
இதுவரையிலும் ஃபெட்னா விழாவில் கலந்து கொள்ளாத த்ரிஷா முதன் முறையாக, செயிண்ட் லூயிஸில் நடைபெறும் தமிழ் விழாவில் கலந்து கொள்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ அழைப்பில், தமிழ் விழாவில் கலந்து கொள்வது மிகவும் பெருமை வாய்ந்ததாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க தமிழர்களை நேரில் சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று பயணம்
தமிழ் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று அதிகாலை விமானத்தில் ஹாங்காங் வழியாக அவரது தாயாருடன் த்ரிஷா செயிண்ட் லூயிஸ் செல்கிறார். அஜீத்துடன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், அவரது அமெரிக்க பயணம் குறித்து கேட்ட போது, 'உலகத் தமிழர்களின் மாபெரும் அமைப்பான ஃபெட்னா விழாவில் கலந்து கொள்வது பெருமைக்குரிய விஷயம். அதற்காகவே, படப்பிடிப்புக்கு முன்னதாக குறுகிய கால பயணமாக அமெரிக்கா செல்வதாக' கூறினார்.
திவாகர் சோனியா, அமுதவாணன்
தமிழ் விழாவில் இன்னிசை விருந்து படைக்க சூப்பர் சிங்கர் திவாகர் மற்றும் சோனியா ஆகியோரும் அமெரிக்கா செல்கிறார்கள். உடன், நகைச்சுவை கலைஞர் அமுதவாணனும் கலந்துகொள்கிறார்.
நெப்போலியன்
சொந்த அலுவல் காரணமாக அமெரிக்காவில் முகாமிட்டுள்ள நடிகர் நெப்போலியனும் தமிழ் விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஜூலை 3ம் தேதி வியாழன் மாலை நடைபெறும் வரவேற்பு விருந்தில் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். அடுத்து 4, 5ம் தேதிகளில் நடைபெறும் விழாவில் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள்.
விவரங்களுக்கு...
தமிழ் விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பேரவையின் தலைவர் முனைவர் தண்டபாணி மற்று மாநாட்டுத் தலைவர் குமாரவடிவேலு தலைமையில் பல்வேறு குழுக்களாக தன்னார்வத்தொண்டர்கள் செய்து வருகின்றார்கள். மேலும் விவரங்களுக்கு http://www.fetna2014.com, மற்றும் www.tamil.oneindia.in இணையதளங்களில் பாருங்கள்.