சுசி லீக்ஸ் சர்ச்சை.. த்ரிஷாவை சீண்டிய சுசித்ரா.. பதிலடி கொடுத்த நடிகை!

சென்னை: தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்து இருக்கும் பாடகி சுசித்ரா, பேட்டியில் நடிகை த்ரிஷா குறித்து பேசி இருந்த நிலையில், அதற்கு அவர் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த சுசித்ரா, சுசி லீக்ஸ் விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் மாட்டிவிட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ் மற்றும் என் முன்னாள் கணவர் கார்த்திக் தான். இருவரும் பிராங்க் செய்கிறேன் என்று இப்படி செய்துவிட்டார்கள். ப்ராங்க் செய்ய ஏதாவது ட்விட்டர் அக்கவுண்ட் தேவைப்பட்டதால், கார்த்திக் என் அக்கவுண்டை தனுஷிடம் கொடுத்துவிட்டார்.

Actress Trisha reacts to singer Suchitra s Controversial speech

த்ரிஷா தான் கொடுத்தாங்க: இயக்குனர் ஜவகரின் மொபைல்போனை வாங்கி கார்த்திக்கிற்கு கண்டபடி மெசேஜ் செய்வார் தனுஷ். அதுவும் ஒருவகையான ப்ராங்க் என்று சொல்வார்கள். இந்த பிராங்க் விஷயத்திற்கு த்ரிஷாவே தானாக தனது பர்சனல் போட்டோவை தந்தார். இதனால் தான் அவங்க ஒரே ஒரு ட்விட்டை போட்டுவிட்டு, இதுவரை பாதிக்கப்படாம இருக்குறாங்க.

இந்த விஷயத்தில் எனது பெயர் தப்பாக பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல், என்னை மனநிலை சரியில்லாதவர் என்று முத்திரை குத்தினார்கள். இதை நினைத்து நினைத்து பல நாட்கள் நான் கோவிலில் கதறி கதறி அழுது இருக்கிறேன். எல்லாத்துக்கும் கடவுள் இருக்கிறார் என்று நினைத்தேன். அதன் பிறகு இந்தியாவில் இருக்கவே பிடிக்காமல் லண்டனுக்கு சென்றேன் என்று பேசி இருந்தார்.

த்ரிஷா பதில்: பாடகி சுசித்ரா, சுசி லீக்ஸ் விவகாரத்தை பேசி நடிகை த்ரிஷாவை சீண்டி இருக்கும் நிலையில், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மறைமுகமாக, 'நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்துப் பேசுகிறது என்று அப்செட் ஆகி இருக்கும் எமோஜியைப் பகிர்ந்துள்ளார்.

Actress Trisha reacts to singer Suchitra s Controversial speech

சுசி லீக்ஸ்: கடந்த 2016ம் ஆண்டு பாடகி சுசித்ரா சுசி லீக்ஸ் என்ற பெயரில், நடிகர் நடிகைகளின் சில அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்களில் நடிகைள் ஆண்ட்ரியா, த்ரிஷா, நிக்கி கல்ராணி, அனுயா உள்ளிட்ட சிலர் இருந்த நிலையில், இந்த புகைப்படங்கள் அப்போது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு இந்த விஷயம் அடங்கிய நிலையில், தற்போது பாடகி சுசித்ரா தனது பேட்டியின் மூலம் மீண்டும் பரபரப்பாக்கியுள்ளார்.'

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X