எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்க பிளீஸ்... த்ரிஷா வேண்டுகோள் எதுக்காக?
சென்னை : நடிகை த்ரிஷா தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது தெலுங்கில் பிருந்தா என்ற வெப் தொடரில் முதல்முறையாக இணைந்துள்ளார்.
இந்நிலையில் தங்களுக்காக பிரார்த்தனை செய்ய அவர் கோரியுள்ளார்.

நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருபவர். முதலில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடித்துவந்த அவர் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடித்து பெயர் பெற்றார்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி
கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்த இவர் சூப்பர்ஸ்டாருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். விஜய்யுடன் கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்களது ஜோடி வெகுவாக ரசிகர்களால் பாராட்டுக்கு உள்ளானது. இதேபோல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

வெப் தொடரில் கவனம்
இந்நிலையில் தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் வெப் தொடரில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். வெப் தொடருக்கு தணிக்கை கிடையாது அதனால் சுதந்திரமாக நடிக்க முடியும். மேலும் வெப் தொடர்களில் நடிப்பதற்கு அதிகமான சம்பளம் கொடுக்கப்படுகிறது. இந்தக் காரணங்களால்தான் நடிகை த்ரிஷா தற்போது வெப் தொடரில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிருந்தா வெப் தொடர்
அதிலும் தெலுங்கில் இவர் தற்போது வெப் தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார். பிருந்தா என்ற வெப் தொடரில் இவர் நடிக்கவுள்ளார். 8 எபிசோட்கள் இந்த தொடருக்காக திட்டமிடப்பட்டுள்ளது. த்ரில்லர் கதையுடன் இந்த தொடர் எடுக்கப்படவுள்ளது. சமீபத்தில் இந்த தொடருக்கான பூஜை போடப்பட்டுள்ளது.

பிரார்த்தனை செய்ய வேண்டுகோள்
இந்நிலையில் இந்த தொடரில் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள த்ரிஷா, தங்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களிடம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கருப்பு வெள்ளையில் தன்னுடைய அழகான புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
Recommended Video

வெப் தொடர்களில் த்ரிஷா
தென்னிந்திய மொழிப் படங்களில் சிறப்பான பல கேரக்டர்களை தொடர்ந்து செய்துவந்த த்ரிஷா, தற்போது வெப் தொடரில் த்ரில்லர் கதாபாத்திரத்தில நடிக்கவுள்ளது ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது. த்ரிஷா வெப் தொடர்களிலும் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











