சமந்தா, கீர்த்தி சுரேஷை பார்த்து கொஞ்சம் பயந்தேன்... நடிகை திரிஷா!

சென்னை: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷா

மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாகிவரும் பொன்னியின் செல்வனின் குந்தவை பிராட்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

கர்ஜனை, ராங்கி என கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் திரிஷா சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷை பார்த்து கொஞ்சம் பயந்ததாக கூறியுள்ளார்.

 திருப்புமுனையாக அமைந்தது

திருப்புமுனையாக அமைந்தது

பிரசாந்த், சிம்ரன் ஜோடியாக நடித்த ஜோடி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை திரிஷா அதன்பிறகு மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மௌனம் பேசியதே,லேசா லேசா, மனசெல்லாம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த திரிஷாவுக்கு விக்ரமின் சாமி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக மாறினார். தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பட்டையை கிளப்பிய திரிஷா அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்

 ஜானு கதாபாத்திரத்தில்

ஜானு கதாபாத்திரத்தில்

தெலுங்கிலும் இவருக்கு மிகப் பெரிய மார்க்கெட் இருக்க அங்கும் ஒரு கலக்கு கலக்கினார். இந்த நிலையில் இடையில் சிறு சறுக்கலை சந்தித்த திரிஷா மீண்டும் 96 திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான 96ல் ஜானு கதாபாத்திரத்தில் திரிஷாவின் நேர்த்தியான நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை.

 எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை

எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை

ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் அதே சமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் திரிஷாவுக்கு மோகினி, பரமபதம், நாயகி உள்ளிட்ட படங்கள் வெளியாகின ஆனால் அவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது ராங்கி மற்றும் கர்ஜனை உள்ளிட்ட படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படங்களில் நடித்து வருகிறார்.

 குந்தவி பிராட்டி

குந்தவி பிராட்டி

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வனில் குந்தவி பிராட்டி கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து வருகிறார். சமீபத்தில் திரிஷாவின் குந்தவி கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Recommended Video

'Trisha மாதிரி நடிச்சிருக்க முடியாது' - Manju Warrier Throw back Interview | Filmibeat Tamil
 சமந்தா, கீர்த்தி சுரேஷை பார்த்து கொஞ்சம் பயந்தேன்

சமந்தா, கீர்த்தி சுரேஷை பார்த்து கொஞ்சம் பயந்தேன்

சினிமாவில் சக போட்டியாளராக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் தனக்கு போட்டியாக சினிமாவில் கலக்கி கொண்டுள்ளதை பார்த்து 3, 4 வருடங்களுக்கு சற்று பயந்ததாகவும். ஆனால் இப்பொழுது அனைவரும் நண்பர்களாக பழகி வருவதாகவும் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக பேசிக் கொள்வதாகவும் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X