Trisha Salary: தக் லைஃப் படத்திற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: வரும் வியாழக்கிழமை அதாவது ஜூன் 5ந் தேதி மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி உள்ள தக் லைஃப் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால், இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவில ப்ரோமோஷன்கள் நடந்து வருது. இந்த திரைப்படத்தில் த்ரிஷா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் நடிப்பதற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு த்ரிஷாவோட மார்க்கெட் ஏகத்துக்கும் ஏறி இருக்கு என்று தான் சொல்ல வேண்டும். அந்த திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை கொடுத்திருந்தார் த்ரிஷா. இந்த படத்தை தொடர்ந்து விஜய், அஜித், கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து 'கோட்' படத்தில் விஜய் உடன் இணைந்து ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். ஒரே பாட்டுக்கு த்ரிஷா நடனமாடியாது கோட் படத்தில் மட்டும் தான்.

thug life trisha Salary

நடிகை த்ரிஷா: அதன்பிறகு அஜித் நடித்த விடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்துல அஜித்தோட ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீஸ்ல நல்ல வசூலை அள்ளியது. அந்த படத்தை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தக் லைஃப் படத்தில் த்ரிஷா நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் சிம்பு, கமலஹாசன், ஜோஜு ஜார்ஸ், அசோக் செல்வன், அபிராமி என பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் வரும் 'சுகர் பேபி' பாடலுக்கு த்ரிஷா வெள்ளை நிற புடவையில் அட்டகாசமான டான்ஸ் ஆடி உள்ளார். இந்த பாடல் இப்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகிட்டு வருகிறது.

த்ரிஷாவின் சம்பளம்: இந்நிலையில், தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்க நடிகை த்ரிஷா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிப்பதற்காக த்ரிஷா ரூ.12 கோடி சம்பளமாக வாங்கி உள்ளார். மேலும், இப்படத்தில் த்ரிஷா இந்திராணி என்ற பாடகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X