வெளிநாட்டில் லூட்டி அடிக்கும் த்ரிஷா..யாருடன் தெரியுமா? கோட் படத்தில் ஆட்டம் போட இதுதான் காரணமா?
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா, தனது தோழிகளுடன் வெளிநாட்டில் லூட்டி அடித்து வருகிறார். அந்த போட்டோ இணையத்தில் ட்ரெண்டாகி வரும் நிலையில், இணையவாசிகள் ஓ கதை அப்படி போகுதா என்று கேட்டு போட்டோவிற்கு கீழ் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஜோடி படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்த த்ரிஷா, அதன் பிறகு லேசா லேசா படத்தில் நடித்தார். ஆனால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுடன் நடித்தார்.முதல் படத்திலேயே திரிஷாவின் நடிப்பும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.எக்பிரஸ் குயின் என வர்ணிக்கப்படும் த்ரிஷா சாமி, கில்லி, மங்காத்தா என வெற்றிப்படத்தில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

நடிகை த்ரிஷா: தமிழ் சினிமா மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக நடித்து வந்த த்ரிஷாவிற்கு திடீரென படவாய்ப்பு குறைந்ததை அடுத்து அவர் திரையில் தென்படவில்லை, இனி த்ரிஷா அவ்வளவு தான் பீல்ட் அவுட் என ரசிகர்கள் நினைத்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில், குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து மாஸ் என்ட்ரி கொடுத்தார்.அந்த படத்தைப் பார்த்த த்ரிஷாவின் பேன்ஸ் த்ரிஷாவிற்கு மட்டும் வயசே ஆகாதா என சொல்லும் அளவிற்கு இருந்தார்.

மேடம் செம பிஸி: இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் லியோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து டாப் கியரில் இருக்கும் த்ரிஷா, அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார். ஒருபக்கம் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடும் அவர் மறுபக்கம் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில், த்ரிஷா கடைசியாக பிருந்தா என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். அதில் முதன்முறையாக காக்கி சட்டை போட்டு போலீசாக நடித்திருந்தார்

மட்டபாடலுக்கு: அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் நடித்த கோட் படத்தில் மட்ட பாடலுக்கு ஆட்டம் போட்டு கில்லி ''அப்படிப்போடு போடு'' பாடலை நினைவுப்படுத்தினார். தற்போது இந்த பாடல் தான் இணையத்தில் டிரெண்டான பாடலாக இருக்கிறது. இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இருக்கும் த்ரிஷா, அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கோட் படத்திற்கு விஜய்க்கு 200 கோடி சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில், ஒரே பாடலுக்கு நடனமாடிய த்ரிஷாவிற்கு ரூ80 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் லூட்டி: பிஸியான நடிகையாக இருக்கும் த்ரிஷா, தனது பெண் தோழிகளுடன் மொராக்கோவுக்கு சுற்றுள்ளா சென்றுள்ளார். அந்த போட்டோக்களை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த 6 பெண் தோழிகளில் கோட் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் ஒருவர். அந்த போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில்,போட்டோவை பார்த்த இணையவாசிகள் ஓ கதை அப்படி போகுதா என்றும், கோட் படத்தில் ஆட்டம் போட இதுதான் காரணமா? எங்க தப்பா நினைச்சிட்டோமே என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











