Trisha: சாய்பாபா உடன் பிறந்த நாள் கொண்டாட்டம்.. விஜய் கோயிலில் திரிஷா வழிபாடு?

சென்னை: நடிகை திரிஷா நேற்றைய தினம் தன்னுடைய பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டிய அடுத்தடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் பூங்கொத்துக்கொள்ளுடன் இருக்கும்படியாகவும் கேக் வெட்டும்படியாகவும் புகைப்படங்கள் காணப்படுகின்றன மேலும் சாய்பாபா புகைப்படத்தையும் திரிஷா பகிர்ந்துள்ளார். பிறந்தநாளையொட்டி, நடிகர் விஜய்யின் சாய்பாபா கோயிலில் திரிஷா வழிபாடு மேற்கொண்டதாக முன்னதாக தகவல்கள் வெளியான சூழலில் தற்போது சாய்பாபா புகைப்படத்தை திரிஷா பகிர்ந்துள்ளது அதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Actress Trisha shared her birthday celebration photos with Saibaba photo

நடிகை திரிஷா: நடிகை திரிஷா அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் மற்றும் திரிஷா பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது இவர்களின் கூட்டணியில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான கில்லி படம் திரையரங்குகளில் ரீ ரிலீசாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திலும் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார் திரிஷா.

அடுத்தடுத்த படங்கள்: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக அஜித்துடன் விடா முயற்சி, கமல்ஹாசனுடன் தக் லைஃப், விஸ்வம்பரா, டொவினோ தாமசுடன் ஒரு படம் என அடுத்தடுத்த படங்கள் வரிசைக்கட்டியுள்ளன. இந்நிலையில் நேற்றைய தினம் திரிஷா தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் தங்களது வாழ்த்துக்களை திரிஷாவிற்கு பகிர்ந்து இருந்தனர். தன்னுடைய பிறந்தநாளையொட்டி த்ரிஷா விஜய்யின் சாய்பாபா கோயில் சாமி தரிசனம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

பிறந்தநாள் கொண்டாட்டம்: இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரிஷா பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அதில் பூங்கொத்துக்களுடன் த்ரிஷா காணப்படுகிறார், மேலும் கேக் வெட்டும்படியான புகைப்படமும் சாய்பாபாவின் புகைப்படத்தையும் திரிஷா பகிர்ந்துள்ளார். இதையொட்டி விஜய்யின் சாய்பாபா கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்ததாக வெளியான தகவல் தற்போது உண்மையாகியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டிலும் தன்னுடைய பிறந்தநாளை சீரடியில் சாய்பாபா கோயிலில் தன்னுடைய தோழிகளுடன் கொண்டாடினார் திரிஷா. இந்நிலையில் இந்த ஆண்டும் சாய்பாபாவுடன் அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் சிறப்பாகியுள்ளது.

Actress Trisha shared her birthday celebration photos with Saibaba photo

இளமை குறையாத திரிஷா: அடுத்ததாக பாலிவுட்டிலும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார் திரிஷா. சல்மான் கானுடன் அவர் அடுத்தப்படத்தில் ஜோடி சேரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் திரிஷா கமிட்டாகியுள்ளது குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். தொடர்ந்து 22 ஆண்டுகள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவரும் திரிஷா, இன்றைய தினம் தன்னுடைய 41வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஆயினும் இன்னும் இளமை குறையாமல் அவர் உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X