Trisha: 30 வருஷமானாலும் நேசம் மாறல.. அதிகமாத்தான் ஆகியிருக்கு.. திரிஷா பகிர்ந்த விஷயம்!
டோக்கியோ: நடிகை திரிஷா நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகின்றன. தற்போது கமல்ஹாசனுடன் தக் லைஃப். அஜித்துடன் விடாமுயற்சி படங்களில் நடித்து முடித்துள்ள திரிஷா, அடுத்ததாக அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்ததாக சூர்யா 45 படத்திலும் திரிஷா ஜோடி சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் திரிஷா இணைந்துள்ள விஷ்வம்பரா படத்தின் ஷூட்டிங்கிற்காக தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ளார் திரிஷா. அங்கு படத்தின் பாடல் காட்சிகள் உள்ளிட்டவை படமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜப்பான் பயணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை திரிஷா: நடிகை திரிஷா அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் சூழலில் அடுத்ததாக அவரது நடிப்பில் தக் லைஃப் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டவர்களுடன் இணைந்து திரிஷா நடித்துள்ளார். அடுத்ததாக அஜித்துடன் திரிஷா நடித்துள்ள விடாமுயற்சி படமும் அடுத்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்ததாக அஜித்தின் குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜப்பான் சென்ற திரிஷா: இந்நிலையில் தெலுங்கிலும் சிரஞ்சீவியுடன் இணைந்து விஷ்வம்பரா படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக சிரஞ்சீவி, திரிஷா உள்ளிட்ட நடிகர்கள் ஜப்பான் சென்றுள்ளனர். அங்கு பாடல் காட்சியின் சூட்டிங் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜப்பானில் தான் சென்றுள்ள இடத்தின் ஹோட்டல் மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் வீடியோவை வெளியிட்டுள்ளார் திரிஷா. மேலும் ஜப்பானின் பாரம்பரிய உடையிலும் திரிஷா தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மாறாத நேசம்: இந்நிலையில் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் ஜப்பான் வந்துள்ளதாகவும் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஜப்பான் மீதான நேசம், தற்போது மேலும் அதிகரித்துள்ளதாகவும் திரிஷா தன்னுடைய உருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜப்பான் ஒரு வைப் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் விஜய்யுடன் திரிஷா நடித்து வெளியான லியோ படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. இந்த படத்தில் விஜய் மற்றும் திரிஷாவின் கிஸ்ஸிங் சீனும் இருந்த நிலையில் இவர்களின் கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான விஜய்யின் கோட் படத்திலும் பாடல் ஒன்றுக்கு திரிஷா இணைந்து ஆட்டம் போட்டிருந்தார்.
திரிஷா ரீ-என்ட்ரி: யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த பாடல் மிகச் சிறப்பாக ரசிகர்களை கவர்ந்த நிலையில் பாடலில் விஜய் மற்றும் திரிஷாவின் கெமிஸ்ட்ரி மீண்டும் சிறப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் திரிஷா நடித்து வருகிறார். இடையில் சில காலங்கள் இவரது மார்க்கெட் டல் அடித்த நிலையில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த 96 படம் இவருக்கு மிக சிறப்பான ரீ-என்ட்ரியை கொடுத்திருந்தது. தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படமும் திரிஷா கேரியர் பெஸ்ட் படங்களாக அமைந்தன. இந்த படத்தில் குந்தவைக்கு கேரக்டரில் மிகவும் அழுத்தமான மற்றும் அழகான கேரக்டரை வெளிப்படுத்தி இருந்தார் திரிஷா.


Click it and Unblock the Notifications










