Trisha: கீர்த்தி சுரேஷ் கல்யாண விருந்து.. புகைப்படம் வெளியிட்ட திரிஷா.. அட இவ்ளோ ஐட்டமா?
கோவா: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவந்த நடிகை கீர்த்தி சுரேஷிற்கு நேற்றைய தினம் கோவாவில் அவரது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டில் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களது திருமணத்தில் நடிகர் விஜய், திரிஷா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
ஆண்டனி கிறிஸ்தவராக இருந்தாலும்இந்த திருமணம் இந்து முறைப்படி நடந்துள்ளது. தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் நாயகியாக என்ட்ரி கொடுத்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டவர்ளுடன் இணைந்து நடித்துள்ளார். இதனிடையே இன்னும் சில தினங்களில் இவரது பாலிவுட் என்ட்ரி படம் ரிலீசாகவுள்ளது.

கீர்த்தி சுரேஷ் &ஆண்டனி தட்டில் திருமணம்: நடிகை கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறியதற்கு அவர் நடிப்பில் வெளியான மகா நடி படம்தான் முக்கியமான காரணமாக அமைந்தது. தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் என்ட்ரி கொடுத்த கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து விஜய், விக்ரம், ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் ரகுதாத்தா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்ததாக ரிவால்வர் ரீட்டா படம் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களுமே நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகியுள்ளன.

இந்து முறைப்படி திருமணம்: இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய திருமணம் குறித்து அறிவித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். கோவாவில் இவரது திருமணம் நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. தன்னுடைய 15 ஆண்டுகால நண்பர் ஆண்டனி தட்டிலை தன்னுடைய பெற்றோர் சம்மதத்துடன் நேற்றைய தினம் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துள்ளார். ஆண்டனி கிறிஸ்தவராக இருந்தாலும் இந்து முறைப்படி இந்த திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் நடிகர் விஜய், திரிஷா, மாளவிகா மோகனன் போன்ற திரைத்துறை பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

விஜய், திரிஷா பங்கேற்பு: இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவரும் கூட்டாக சென்றதாக தெரிகிறது. இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இதனிடையே இந்த திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவுகள் குறித்து திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ் -ஆண்டனியின் சந்தோஷமான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். கீர்த்தி சுரேஷிற்கு இந்த திருமணத்தில் ஆண்டாளை போல மேக்கப் செய்யப்பட்டிருந்தது. திருமணத்தின்போது அவர் தனக்கேயுரிய ட்ரேட்மார்க் சிரிப்புடன் தொடர்ந்து காணப்பட்டார்.

விருந்து புகைப்படத்தை வெளியிட்ட திரிஷா: இதேபோல இந்த திருமணத்தில் கேரள முறைப்படி விருந்து பரிமாறப்பட்டிருந்தது. இலை நிறைந்திருக்கும்படி கேரளாவின் பாரம்பரிய சிப்ஸ் முதற்கொண்டு அனைத்தும் இந்த உணவில் நிரம்பி வழிந்தன. திரிஷாவும் பரிமாறப்பட்ட இந்த உணவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ப்பா என்று உற்சாகத்தையும் பகிர்ந்துள்ளார். தன்னுடைய நீண்ட கால காதலரை மணம் முடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அவரது முதல் பாலிவுட் படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில், தொடர்ந்து படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











