என்ன நாள் இது.. நடிகை திரிஷா வெளிச்சம் பாதி.. இருள் பாதி என வெளியிட்டிருக்கும் க்யூட் போட்டோ!
சென்னை: நடிகை திரிஷா என்ன நாள் என்று கேட்டு வெளியிட்டிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நடிகையாக இருந்து வருகிறார் நடிகை திரிஷா. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்திருக்கிறார்.
ஏராளமான படங்களில் நடித்துள்ள திரிஷா, நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகள் மீதும் அன்பு செலுத்தி வருகிறார். அண்மையில் பிறந்தநாளை கொண்டாடினார்.

என்ன நாள் இது?
இந்நிலையில் என்ன நாள் இது என இருள் பாதி, வெளிச்சம் பாதி உள்ள பிளாக் அன்ட் வொய்ட் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார். அதில் பாவாடை தாவணியில் செம க்யூட்டாக உள்ளார் திரிஷா. இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளனர்.

கிண்டல் கலாய்
சில நெட்டிசன்கள் கவிதைகளை சொல்லி திரிஷாவின் அழகை வர்ணித்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் எப்போ கல்யாணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டு கலாய்த்துள்ளனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் 20 வருஷத்துக்கு முன்பு எடுத்த போட்டோவை இப்போது ஷேர் செய்திருக்கிறீர்களே என கேட்டு கிண்டலடித்துள்ளனர்.

தூயவளின் கண்..
திரிஷாவின் போட்டோவை பார்த்த இந்த ரசிகர் துன்பம் தொலைந்து போகும் தூயவளின் கண் வளைவில்.. நெறி தவறா ஆடவரும் நெற்றி கூரில் நெளிந்து போவான்.. மணம் முடிக்க ஆவல் என்றால் மனதோடு வைத்துக்கொள்.. இளம் காளைகளின் சாபம் இன்றியமையாதது.. என்று கூறியிருக்கிறார்.

பிரம்மனும் மூச்சையுற்றான்
மற்றொரு நெட்டிசனான இவர், இப்படி ஒரு அழகான போட்டோவை பார்க்கும் போது பவுர்ணமி என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார். இப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க தன்னிடம் கற்பனை தீர்ந்ததை
எண்ணித்தான் பிரம்மனும் மூச்சையுற்றான்.. என பாடல் வரிகளை குறிப்பிட்டுள்ளார்.

பதில் சொல்லவில்லை
இப்படி கமெண்டுகளை குவித்துள்ள நெட்டிசன்கள், அவர் குறிப்பிட்டுள்ள சிம்பலை வைத்து என்ன நாள் என தெரிவிக்கவில்லை. அதற்கு திரிஷாவே பதில் சொன்னால்தான் உண்டு. திரிஷாவின் இந்த க்யூட் போட்டோக்களை நெட்டிசன்கள் பலரும் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











