Trisha: அடுத்தடுத்து வெட்டிங் போசில் த்ரிஷா.. அம்மணிக்கு கல்யாண ஆசை வந்துடுச்சா?
சென்னை: நடிகை த்ரிஷா தொடர்ந்து பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்.
விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள த்ரிஷா, பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக விஜய்யுடன் நடித்துள்ள லியோ படம் ரிலீசாகவுள்ளது.
திருமண கெட்டப்பில் அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்ட த்ரிஷா: நடிகை த்ரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருபவர். லேசா லேசா என்ற படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவருக்கு, அடுத்தடுத்து வெளியான படங்கள் சிறப்பாக அமைய தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இவரது கேரியர் பெஸ்ட்டாக சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் பாகங்கள் அமைந்துள்ளன. படத்தில் குந்தவையாக வாழ்ந்திருந்தார் த்ரிஷா.

இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி த்ரிஷாவிற்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து விஜய், அஜித், விஷால், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள த்ரிஷா, தற்போது விஜய்யுடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு லியோ படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தின் காஷ்மீர் சூட்டிங்கின்போது விஜய்யுடனும் படக்குழுவினருடனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார் த்ரிஷா.
சமீபத்தில் தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடினார் த்ரிஷா. இவர் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாத நிலையில், இவரது திருமணம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவரது திருமணம் குறித்த பல தகவல்கள், வதந்திகள் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளது. இதனிடையே, சமீபத்தில் திருமணம் குறித்த கேள்விக்கு த்ரிஷா சிறப்பான பதிலளித்திருந்தார்.

தன்னுடைய நண்பர்கள் சிலர், திருமணமான சில வருடங்களிலேயே விவாகரத்து குறித்து யோசித்து வருவதாகவும், தனக்கு விவாகரத்து செய்வதில் எந்த உடன்பாடும் இல்லை என்றும், தன்னுடன் தொடர்ந்து சிறப்பான வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்பவரை மட்டுமே தான் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அத்தகைய நபரை தான் சந்தித்தால் உடனடியாக திருமணம் செய்துக் கொள்வேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்த திருமண கெட்டப்பிலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பிரபல நகைக்கடை ஒன்றிற்காக அவர் இந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனாலும் தொடர்ந்து கல்யாண கெட்டப்பிலான புகைப்படங்களை த்ரிஷா வெளியிட்டு வருவதால் அவருக்கு திருமண ஆசை தலைத்தூக்கியுள்ளதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தப் புகைப்படங்களில் மிகவும் க்யூட்டாக காணப்படுகிறார் த்ரிஷா.


Click it and Unblock the Notifications











