Trisha: த்ரிஷாவின் Sunday.. யாரைக் கட்டிப்புடிச்சு படுத்து இருக்காங்கனு பாருங்க.. செம லவ்வு போல!
சென்னை: நடிகை த்ரிஷா கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார். த்ரிஷா நடிகை என்றாலும், அவருக்கு செல்லப்பிராணிகள் மீது எப்போதும் தனி அலாதி கொண்டவர். அவ்வப்போது தனது செல்லப் பிராணிகளுடன் இணைந்து அவர், பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இப்படியான நிலையில் இவர் தனது செல்லப்பிராணியுடன் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்துக் கொண்டு உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
த்ரிஷா நடிப்பில் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளதால் படம் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என மொத்த திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டு உள்ளது. இந்த ஆண்டில் த்ரிஷா நடிப்பில் வெளியாகவுள்ள மூன்றாவது படம் இது. இதற்கு முன்னர் மலையாளத்தில் ஐடென்டி மற்றும் தமிழில் அஜித்துடன் விடாமுயற்சி படங்கள் வெளியானது.

வரும் ஜூன் மாதத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் வெளியாகவுள்ளது. மேலும் இவர் தற்போது சூர்யாவுடன் இணைந்து, சூர்யாவின் 45 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகளும் நடைபெற்று வருகிறது.
த்ரிஷா: த்ரிஷா மிகவும் பிஸியான நடிகை என்றாலும், அவ்வப்போது அவருக்கு கிடைக்கும் நேரத்தை தனது செல்லப் பிராணிகளுடன் செலவிட்டு வருகிறார். த்ரிஷாவுக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிரியம். அதிலும் நாய்கள் என்றால், இந்த பிரியம் இரண்டு மடங்காக மாறிவிடும். தெரு நாய்கள் நலனில் கவனம் செலுத்தி வருபவர் த்ரிஷா. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் இவர் மிகவும் பிரியத்துடன் வளர்த்து வந்த செல்லப் பிராணி உடல்நலக் குறைவால் மரணித்து விட்டது. தனது செப்பிராணியின் மரணம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.

நாய்க்குட்டி: இப்படியான நிலையில் த்ரிஷா தற்போது, புது நாய்க்குட்டி ஒன்றை வாங்கி, தனது செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். மம்மா என பெயர் வைக்கப்பட்ட இந்த நாய்க்குட்டி த்ரிஷாவுக்கு மிகவும் பிடித்த பிராணியாக மாறிவிட்டது. சில வாரங்களுக்கு முன்னர் கூட தனது மம்மா நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்டிருந்தார். இது பலரது கவனத்தை ஈர்த்தது.

கட்டிப்புடி வைத்தியம்: இந்நிலையில் தற்போது, தனது மம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக கண்ணாடி முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல், தனது செல்லப்பிராணி மம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவர் படுத்துக் கொண்டுள்ள புகைப்படத்தையும் த்ரிஷா பகிர்ந்துள்ளார். மேலும், காரில் அமர்ந்து கொண்டு தனது நாய்க்குட்டியுடன் புகைப்படம் எடுத்துள்ளார். மொத்தம் 4 புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் த்ரிஷா, இது தொடர்பாக. " அனைவருக்கும் இனிமையான ஞாயிற்றுக்கிழமை அமைந்திருக்கும் என நம்புகிறேன்" என கேப்ஷன் இட்டுள்ளார். இன்னும் திருமணம் செய்து கொள்ளாத த்ரிஷா, தனது நாய்க்குட்டி கட்டிக் கொண்டு படுத்திருப்பதைப் பார்த்த ரசிகர்கள், எப்போது திருமணம் என கேள்வி கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











