GBU: குட் பேட் அக்லி டெலிடேட் சீன்ஸ்.. அஜித்தும் த்ரிஷாவும் குலுங்கி குலுங்கி.. ஆசம் வீடியோ!
சென்னை: அஜித் குமார் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, மைத்ரி மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படம் பார்த்த ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துப் போய்விட்டால், படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படியான நிலையில் படத்தில் இருந்து டெலிடேட் சீன்ஸை படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அஜித் மற்றும் த்ரிஷா அடுத்தடுத்த படங்களில் ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்கள். இவர்கள் இணைந்து நடித்த விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் குட் பேட் அக்லி இதுவரை ரசிகர்கள் தரப்பில் திருப்திகரமான விமர்சனங்களை மட்டுமே பெற்று வருவதால், அனைவரும் படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது. இதில் நடிகை த்ரிஷாவின் கதாபாத்திரம் குறித்துதான் இணையவாசிகள் விமர்சித்தனர்.

அதாவது படத்தில் த்ரிஷாவின் ரம்யா கதாபாத்திரத்திற்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை. மேலும் படத்தில் அந்த கதாபாத்திரம் பெரிய அளவுக்கு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த கதைக்கு, அந்த கதாபாத்திரம் ஒட்டவில்லை என்றெல்லாம் விமர்சித்தார்கள். இப்படி இருக்கும்போது, படம் வெளியாவதற்கு முன்பே படக்குழு தரப்பில் இருந்தும், த்ரிஷாவும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அவை பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆனால் த்ரிஷா பகிர்ததைப் போன்ற புகைப்படங்களுக்கு பொருத்தமான காட்சிகள் படத்தில் இல்லை. இது த்ரிஷா ரசிகர்களுக்கு கொஞ்சம் அப்செட்டைக் கொடுத்தது.
டெலிடேட் சீன்ஸ்: படத்தின் நீளம் 2.20 மணி நேரங்கள் தான் எனும் போது, படக்குழு ஏன் த்ரிஷாவின் காட்சியை நீக்கினார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. மேலும் டிரைலரில் இடம் பெற்றிருந்த, அர்ஜுன் தாஸின் காட்சியான, 10 கிலோ கறி வேணும் பாய் என்ற காட்சி படத்தில் இல்லையே என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது. இப்படி இருக்கும்போது, த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களையும் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ரொமான்ஸ்: அதாவது, த்ரிஷா பகிர்ந்துள்ள விடியோவில், ரசிகர்கள் பலரும் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். அதாவது அந்த வீடியோவில், த்ரிஷாவும் அஜித்தும் செம ரொமான்ஸாக நடனமாடிக் கொண்டு உள்ளார்கள். அந்த வீடியோவை த்ரிஷா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இருவரும் செம க்யூட்டாக குலுங்கி குலுங்கி நடனமாடும் அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை விமர்சித்து வருகிறார்கள்.

லியோ: இவ்வளவு ரொமாண்டிக்காக உள்ள காட்சியை ஏன் படத்தில் இருந்து நீக்கினீர்கள்? படத்தின் நீளமும் 140 நிமிடங்கள் தான் எனும் போது, இந்த பாடல் காட்சிக்காக இன்னும் 10 நிமிடங்கள் கூட கூடுதலாக காட்சிகளை இணைத்திருக்கலாமே என்ற கேள்வியையும் முன் வைத்து வருகிறார்கள். மேலும் சிலர், இந்த ரொமான்ஸ், லியோ படத்தில் விஜய் மற்றும் த்ரிஷாவின் ரொமான்ஸை விடவும் தூக்கலாக உள்ளதே எனவும் கமெண்ட் அடித்து வருகிறார்கள். த்ரிஷா பகிர்ந்துள்ள புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவைப் பகிர்ந்துள்ள த்ரிஷா நன்றி மாமே என கேப்ஷன் இட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











