ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.. வீடியோவை வெளியிட்டார் த்ரிஷா!
சென்னை : பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார் த்ரிஷா.
Recommended Video
தமிழ் சினிமாவில் தற்போது பல ஹீரோயின்கள் உள்ளனர். ஆனால் முன்னணி ஹீரோயின்கள் சிலர்தான் 90ஸ் கிட்ஸின் பிடித்தமான ஹீரோயின். அந்த வகையில் த்ரிஷா 90ஸ் கிட்ஸ் மட்டுமின்றி அனைவருக்கும் பிடித்தமான ஹீரோயினாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் மாடலிங் செய்து கொண்டிருந்த இவர் ஜோடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பின் மெளனம் பேசியதே திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பையும் பெற்றார்.
தொடர்ந்து சாமி, கில்லி போன்ற வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமானார். இன்று வரை அவரின் கில்லி படம் தொலைக்காட்சியில் வந்தால் அப்படி போடு பாடலை ரசிக்காதவர்கள் இல்லை. தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார்.

இன்றுள்ள பல ஹீரோயின்களுக்கு சீனியர் த்ரிஷாதான் எனினும் 96 படத்தின் மூலம் தான் எந்த விதத்திலும் குறைவில்லை என்று நிரூபித்து விட்டார். இவர் நடித்த அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் மிக அழகாக நடித்திருப்பார். இன்றளவிலும் இந்த கதாபாத்திரங்கள் பேசப்பட்டு வருகிறது.

இவரின் பிறந்த நாளன்று நேற்று இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தன. மேலும், பல ரசிகர்கள் வீடியோ மூலம் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டார். வாழ்த்துக்குறிய அனைத்தையும் வீடியோக்களையும் ஒன்றாக சேர்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











