ஹாப்பி பர்த்டே ஜோயா குட்டி..இன்றோடு ஓராண்டு..எனது வாழ்வில் மறக்க முடியாத நாள் திரிஷா!

சென்னை : இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனில் இதுவரை நடித்திராத தரமான கதாபாத்திரத்தில் திரிஷா நடித்து வருகிறார்.

கார்த்திக் டயல் செய்த எண் குறும் படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த திரைப் படங்கள் ரிலீசாக வரிசைகட்டி நின்று கொண்டிருக்கும் நிலையில் இதில் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் திரிஷா நடித்துள்ளார்.

என்றும் இளமை மாறாமல் இன்றுவரை அதே துள்ளலுடன் திரையில் ஜொலித்து வரும் நடிகை திரிஷா தான் வளர்த்து வரும் செல்லப் பிராணி ஜோயாவுக்கு இன்றுடன் ஓர் ஆண்டு முடிவு பெறுகிறது இது என் வாழ்வில் மறக்க முடியாத நாள் என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ள புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது

கதாநாயகிக்கு நண்பராக

கதாநாயகிக்கு நண்பராக

மாடலிங் அழகியாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிக் கோப்பைகளை அள்ளி வந்த திரிஷா ஜோடி திரைப்படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்து முதல் முறையாக திரைப்படங்களில் அறிமுகமானதைத் தொடர்ந்து, மௌனம் பேசியதே, லேசா லேசா என இவர் நடித்த அடுத்தடுத்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் கவனத்தைப் பெற்றது.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல மிகவும் லட்சணமாக பார்த்தவுடனேயே கவரும் திரிஷாவுக்கு சாமி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த நிலையில் அதை தொடர்ந்து கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும் என தமிழில் தொடர் வெற்றி படங்களை கொடுத்தது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சரிக்கு சமமாக சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்து இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

வன்முறைகளுக்கு குரல் கொடுத்து

வன்முறைகளுக்கு குரல் கொடுத்து

சிறுவயது முதலே செல்ல பிராணிகளிடம் மிகவும் பாசத்துடன் இருந்து வரும் திரிஷா வீட்டில் எக்கச்சக்கமான பறவைகள் நாய்கள் பூனைகள் என அனைத்து வகையான செல்லப் பிராணிகளையும் வளர்த்துவரும் அதேசமயம் செல்லப் பிராணிகளின் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

ஒரே மாதிரி ஆடையை

ஒரே மாதிரி ஆடையை

குறிப்பாக நாய்களிடம் மிகவும் பாசமாக இருக்கும் திரிஷா சென்ற ஆண்டு ஜோயா என்ற நாய் குட்டியை எடுத்து வளர்த்து வந்த நிலையில் இன்றோடு அதற்கு ஓர் ஆண்டு முடிவதால் முதல் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ஜோயாவுக்கும் தனக்கும் ஒரே மாதிரி ஆடையை வடிவமைத்து போட்டுக்கொண்டார்.

ஜோயாவுக்கு ரசிகர் கூட்டம்

ஜோயாவுக்கு ரசிகர் கூட்டம்

அது மட்டுமல்லாமல், ஜோயா முதல் முறையாக வீட்டில் காலடி எடுத்து வைத்தபொழுது கால் பாத அச்சை சிமெண்ட்டால் உருவாக்கி அதற்கு பூஜை செய்தவாறு ஜோயாவுடன் உட்கார்ந்து கொண்டிருக்கும் அழகிய புகைப்படத்தைப் பதிவிட்டு 2019 டிசம்பர் 8ம் தேதி இதே நாள். இந்த நாளை வாழ்வில் மறக்கமாட்டேன் என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ள இந்த க்யூட் புகைப்படத்திற்கு லைக்குகள் லட்சக்கணக்கில் குவிந்து வர திரிஷாவை விட ஜோயாவுக்கு ரசிகர் கூட்டம் பெருகி உள்ளது. ஹாப்பி பர்த்டே ஜோயா குட்டி.

More from Filmibeat

Read more about: trisha த்ரிஷா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X