Trisha: என்னோட மகன் செத்துப்போயிட்டான்.. எனக்கு கிறிஸ்துமஸ் கிடையாது.. திடீரென த்ரிஷா போட்ட பதிவு
சென்னை: நடிகை த்ரிஷா வீட்டில் இன்று காலை ஏற்பட்ட சோகம் குறித்து அவர் ட்விட்டரில் தற்போது பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார். இந்த ஆண்டு விஜய்யின் கோட் படத்தில் இடம்பெற்ற 'மட்ட' பாடலுக்கு மஞ்சள் சேலை அணிந்து குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார் த்ரிஷா. அஜித்துடன் அவர் இணைந்து நடித்த விடாமுயற்சி திரைப்படம் இந்த வருடம் வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அந்த படம் வரும் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும், குட் பேட் அக்லி படத்திலும் த்ரிஷா தான் ஹீரோயின். பொங்கலுக்கு மலையாள நடிகரான டொவினோ தாமஸ் உடன் த்ரிஷா நடித்துள்ள ஐடென்டிட்டி படமும் வெளியாகிறது. சிரஞ்சீவியுடன் அவர் நடித்துள்ள விஸ்வம்பரா படமும் விரைவில் வெளியாக காத்திருக்கிறது.

கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள தக் லைஃப் படத்தின் மூலம் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ளார் த்ரிஷா. ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படங்களில் முன்னதாக நடித்திருக்கிறார்.
என்னோட மகன் செத்துட்டான்: நடிகை த்ரிஷாவுக்கு திருமணமே நடைபெறவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அவர் தனது மகனாக செல்ல நாய்க்குட்டியான ஜோரோவை (Zorro) வளர்த்து வந்தார். கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலையில் தனது மகன் ஜோரோ இறந்துவிட்டான். அதனால், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை நான் கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கிறேன். என்னை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்குத் தெரியும் ஜோரோ இல்லாமல் என் வாழ்க்கை பூஜ்ஜியமாக மாறிவிட்டது. இப்போதைக்கு என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. சில நாட்கள் வேலைக்கு வரப்போவதில்லை. சோஷியல் மீடியா உள்ளிட்ட எதிலும் ஆர்வம் செலுத்த முடியாது என த்ரிஷா உருக்கமாக தனது செல்ல நாய்க்குட்டி உயிரிழந்த தகவலை அறிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆறுதல்: நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருந்து வருகிறார். தொடர்ந்து கைவசம் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி வருகின்றன. சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்காக கோவா சென்று வந்தது ஏகப்பட்ட கிசுகிசுக்களை கிளப்பி வரும் நிலையில், த்ரிஷாவுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட சோகம் குறித்து அறிந்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











