Trisha - நடிகருடன் லிவிங் டூ கெதரில் த்ரிஷா - வெளியான ஷாக் தகவல்.. திருமணம் நின்றதற்கும் இதான் காரணமா?

சென்னை: Trisha (த்ரிஷா) நடிகை த்ரிஷா பல வருடங்கள் தெலுங்கு நடிகர் ஒருவருடன் லிவிங் டூ கெதரில் இருந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

த்ரிஷா தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேலாக லைம் லைட்டில் இருப்பவர். சமீபத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் குந்தவை கதாபாத்திரம் ஏற்றிருந்த அவருக்கு நல்ல பெயரையே பெற்றுக்கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக த்ரிஷா மீதான க்ரேஸ் ரசிகர்களுக்கு மீண்டும் அதிகரித்திருப்பதை கவனிக்க முடிகிறது.

actress Trisha was living together with a Telugu actor for many years.

திருமணம் செய்துகொள்ளாத த்ரிஷா: த்ரிஷாவுக்கு 40 வயது ஆகிறது. ஆனால் அவருக்கு இன்னமும் திருமணம் நடக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்னதாக வருண் என்பவரை திருமணம் செய்வதாக இருந்தார். அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த நிச்சயதார்த்தம் திருமணம் நோக்கி நகராமல் அப்படியே நின்றுவிட்டது. இது அப்போது பெரும் பேசுபொருளானது.

திருமணம் நின்றதற்கு தாய்தான் காரணமா?: அதேசமயம் த்ரிஷாவின் திருமணம் நின்றதற்கு அவரது தாய் உமா கிருஷ்ணன் தான் காரணம் என்றும், த்ரிஷாவை வைத்து நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார் என்ற பேச்சும் பரவலாக எழுந்தது. ஆனால் அதனை உமா தீவிரமாக மறுத்தார். இதற்கிடையே, த்ரிஷா திருமணத்திற்கு பிறகு நடிக்கக்கூடாது என மாப்பிள்ளை வீட்டார் கண்டிஷன் போட்டதுதான் திருமணம் நின்றுபோனதற்கு காரணம் என்ற தகவலும் வெளியானது.

actress Trisha was living together with a Telugu actor for many years.

எப்போது திருமணம்: இப்படியாக நாள்கள் செல்ல த்ரிஷா திருமணம் குறித்து வாய் திறக்காமல் இருந்தார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் புரோமோஷனில் கலந்துகொண்ட அவரிடம் எப்போது திருமணம் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. எனது மனதுக்கு பிடித்தவரை பார்த்தால் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். திருமணத்திற்கு பிறகு விவாகரத்து என்பதில் எனக்கு எப்போதுமே விருப்பம் இல்லை என தெரிவித்திருந்தார்.

தெலுங்கு நடிகருடன் லிவிங் டூ கெதர்: இந்நிலையில் த்ரிஷா தெலுங்கு நடிகர் ஒருவருடன் பல வருடம் லிவிங் டூ கெதரில் இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் அந்த நடிகர் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால்; இந்த விஷயம் வெளியே வர ஆரம்பித்ததும் த்ரிஷாவை தெலுங்கு சினிமா கண்டுகொள்ளாமல் இருந்ததாம். இதன் காரணமாக அந்த ரிலேஷன்ஷிப் பாதியில் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நடிகர் யாராக இருக்கும்; அதனால்தான் வருணுடனான திருமணம் நின்றுவிட்டதோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

actress Trisha was living together with a Telugu actor for many years.

அந்த நடிகர் யார்?: தெலுங்கு சினிமாவில் த்ரிஷா பீக்கில் இருந்தபோது நடிகர் ராணா டகுபதியுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் பப்புகளுக்கு சென்று பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகின. எனவே அந்த தெலுங்கு நடிகர் ராணா டகுபதியாகத்தான் இருக்கும் என சமூக வலைதளங்களில் சிலர் கூறிவருகின்றனர். விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடித்துவரும் த்ரிஷாவிடம்; அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாக ஒரு தகவல் கசிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X